பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 9念 வம்பு செறியும் மலர்க் கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் 'தம்பி உடையான் பகையஞ்சான்' - ம் மாற்றம் ந்கனையால் என்னு ம றறமி தந்த --ബ്ലൂ.-69് இது செருகு பாடல் என்பதை மாறுகின்ற சந்தமே காட்டி விடுகின்றது. இப்பாடல்களைப் பன்முறைப் படித்து, மெய்ப்பாடு எப்படி நிகழ்கின்றது என்பதை உணர்தல் வேண்டும். மகிழ்ச்சியின் உச்சம் எப்படி மலரும்? எப்படி மெளனம் கலைந்து சொல் தோன்றும்? என்பன எல்லாம் கம்பரது ஆழ்ந்த அகன்ற அறிவிலே தோன்றுகின்றன. கவியிலே கொண்டு வருகின்ற பரிபூரண கடாட்சமும் அவருக்குக் கிடைத்திருக்கின்றது. படிப்போராகிய நாமும். உணர்ச்சிக் கடலில் மிதக்கின்றோம். ஆனால் 'கம்ப மதத்துப் பாடல் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நடுவில் நின்று சண்டித்தனம் செய்கின்றது. சாலையில் வீழ்த்தப்பெற்ற மரம் வாகனப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்றதுபோல் கதையின் ஒட்டத்தை, உணர்ச்சிப் பெருக்கைத் தடுத்து விடுகின்றது தம்பியுடையான் பகைக்கு அஞ்சான்' என்ற உலக வசனத்தை நடுவில் நுழைத்த பாடலைச் சந்தடி வாக்கில் நுழைத்தால் மக்கள் கை தட்டுவார்கள் என்று நினைத்துப் பிரசங்கியார் செய்த கைங்கரியம் இது. நல்ல கவியரங்கப் பாடல்களின் நடுவே இடைப் பிறவரலாக எதையாவது நுழைத்துப் பலத்த கை தட்டலைப் பெறுகின்றார் அல்லவா? அது போல. 3. நாட்டு படலம் (பாலகாண்டம்), திருமுடி சூட்டுப் படலம் (யுத்த காண்டம்-1) இவற்றில் வரும் இரண்டு பாடல்களைக் காட்டுவேன். நாட்டுப் படலத்தின் பாடல்: முந்துமுக் கனியின் னானா முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டம் கண்டம் இடையிடைச் செறிந்த சோற்றில் -