பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 95 கல்வியிற் பெரிய கம்பர் உபலக்கணத்தைத் துணைக் கொண்டார் என்று கூறுவ்து வருந்தத்தக்கதாகும். இருப்பவையெல்லாம் கம்பர் பாடல் என்று கருதியதால் நேர்ந்த பிழையாகும் இது. கம்பர் பாடல்களில் பிராமணர்,rத்திரியர், வைசியர், சூத்திரர் என்றோ, அல்லது அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் என்றோ சாதி கூறப் பெறவில்லை : கம்பராமாயணத்தில் ஆற்றுப் படலம், நாட்டுப் படலம் நகரப் படலம் என்ற மூன்று படலங்களின் 168 பாடல் களிலும் சாதியைக் காட்டும் குறிப்புகளில் கொடிச்சியர், எயினர், ஆயர், கோவலர் மள்ளர், உழத்தியர், கடைசியர், நுழைச்சியர் என்ற பெயர்களே காணப் பெறுகின்றன. படிப்பவரைப்பற்றி வேள்வி செய்பவரைப் பற்றி, போர்த் தொழில் பழகுபவரைப் பற்றி, கப்பல் சரக்கு ஏற்றி இறக்கி வாணிகம் செய்பவரைப் பற்றி, உழுபவரை பற்றி இன்னும் எவ்வளவோ செயல்கள் செய் பவரைப் பற்றித்தான் பாடல்கள் உள்ளன. இவற்றுள் சாதிப்பாகுபாடு காணும்படி எந்தச் சொல்லும் இல்லை. இந்த ஒரு பாடல்தான் இடையே நின்று மிளிர் கின்றது. அந்தணரைக் கேலி செய்ய நினைத்த ஒருவர் இந்தப் பாடலைப் பாடியிருத்தல் கூடும். பிராமணா போஜன பிரிய: என்ற பழமொழி உண்டல்லவா? தாறு மாறாக உண்டு அமலையை உண்டாக்குவது அந்தணர்க்கு அடுத்த தன்று. அளவாக உண்டு அருள் பரப்புவதே அந்தணர்க்கு அழகு; உரியதும் அதுவே. பிராமணர் விருந்து நடப்பதைப் பார்த்தால் இந்தப் பாடல் மிகவும் பொருத்தமாகத் தோன்றும். அக்கார அடிசில், ததியோதனம், திருக்கண்ண முது(திருக்கன்னல் அமுது) போளி, மிளகு வடை போன்ற உணவுவகைளைச் சாப்பிட ஆயிரக்கணக்கான கூட்டம் சேராதா? இவர்கள் வந்து-ஒரேயடியாக வந்து-மண்டு வதைத் தடுத்து நிறுத்த நூறு ஜவான்கள்! கைகலப்பு!