பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (டாக்டர் ச. மெய்யப்பன், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்} தமிழில் திரு. வி.க. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும் உ. வே. சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாறும் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுவன. திருச்சி T.S.S.ராஜன் அவர்கள் எழுதிய நினைவலைகள்' குறிப்பிடத்தக்கது. பல்லாயிரம் சிறுகதைகளும், ஆயிரக்கணக்கான புதினங்களும் மலிந்துள்ள தமிழில் வாழ்க்கை வரலாறுகள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே எழுதப் பெற்றுள்ளன. நீண்ட வரலாறு உள்ள நெடிய தமிழில் பல்வகை இலக்கியவடிவங்கள் பெருகியுள்ளன.தற்புகழ்தல் குற்றம் என்று கருதித் தமிழ்ப் பெருமக்களும், தமிழறிஞர் களும் தங்கள் வரலாறுகளை எழுதாது விட்டுவிட்டனர். இந்தத் தலைமுறையில் கவியரசுகண்ணதாசன் அவர்களின் * வனவாசமும், ! கலைஞரின் நெஞ்சுக்கு நீதியும், ! ஜெயகாந்தனின் ஒர் இலக்கியவாதியின் அரசியல் அநுபவங்கள் ஆகிய மூன்றும் வாழ்க்கை வரலாற்றிலக் கியங்களில் மும்மணிகளாகத் திகழ்வன. கல்வியாளர் சுந்தரவடிவேலு அவர்கள் ஏறத்தாழ மூவாயிரம் பக்கங்களில் எழுதிய நினைவலைகள்' குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறு ஆகும். மேலே குறிப்பிட்ட வாழ்க்கை வரலாறுகள் அனைத்தும் தமிழ்