பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களின் வளர்ச்சி 99. இவர் தவிர அதே அக்கிரகாரத்தில் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்யர் மருத்துவ நிலையமும் இருந்தது. அதில் டாக்டர் P. K. நாராயண அய்யர் என்ற மருத்துவரும் பணியாற்றினார். இவர் அந்த அக்கிரகாரத் லேயே குடியிருந்தார். டாக்டர் கப்பிரமணிய அய்யர் செக்காலை என்ற இடத்தில் குடியிருந்தார். மருத்துவ நிலையத்திற்கும் அவர் இல்லத்திற்கும் 2 கி. மீ. தொலைவு இருக்கும். இவர் முற்பகல் 8 முதல் 12 மணிவரையிலும் பிற்பகல் 5 முதல் 7க் மணி வரையிலும் மருத்துவ நிலையத் தில் இருப்பார். டாக்டர் P. K. நாராயண அய்யரும் இதே நேரத்தில் நிலையத்தில் பணியாற்றுவார்; அவசரத் திற்கு இல்லத்திலும் இவரைப் பார்த்துச் சிகிச்சை பெறலாம். டாக்டர் சுப்பிரமணியம் நாட்டுப் பற்றாளர், ஒரு சமயம் காங்கிரசின் சார்பாக ஐந்தாண்டுகள் (1947-52) சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றி யவர். நான் காரைக்குடியிலிருந்த பொழுது கோவாப்ப ரேட்டிவ் துறையில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தார். இராமலிங்கம் : இவன் என் மூத்த மகன். 13-10-1949-துறையூரில் பிறந்தவன். இவனுக்குப் பத்து வயதுவரை பல்வேறு உடற்கோளாறுகள் ஏற்பட்டன. சாதாரண வயிற்றுக் கோளாறுகள் கோபால கிருஷ்ணய்ய ரின் சூரணங்களாலேயே குணப்பட்டுவிடும், இவனுக்கு நான்குமுறை கவலைக்கிடமான கோளாறுகள் ஏற்பட்டன. இவற்றை நினைவு கூர்கின்றேன். (1) காதுக் கோளாறு : ஒரு சமயம் காதில் சீழ் வடிந்தது. டாக்டர் சுப்பிரமணியரிடம் காட்டினேன். அவர் கம்பவுண்டரிடம் சுத்தப்படுத்தி மருந்து போட் டனுப்புமாறு கூறினார். அவ்வாறு செய்யப்பட்டது. மறுநாள் அதிகமாகச் சீழ் வடிந்தது. முதல் நாள் சிகிச்சையே மேற்கொள்ளப் பெற்றது. மூன்றாம் நாள் இன்னும் அதிகமான சீழ் வடிந்தது, இதே சிகிச்சை செய்யுமாறு ஏவினார். எனக்குப்பயமாய்ப் போய்விட்டது.