பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களின் வளர்ச்சி 101 வில்லை. உடனே டாக்டர் P. K. நாராயண அய்யரிடம் காட்டினேன். அவர் சோதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றார். உடனே அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப் பெற்றான் சிறுவன். அறுவை செய்து ஒன்பது தையல் போடப் பெற்றன. மருத்துவமனையிலேயே படுக்கை; என் அன்னையார் வேளாவேளைக்கு உணவு கொண்டு சென்று இரவு கூட அங்கேயே தங்கிப் பைய னுக்குத் துணையாக இருந்தார்கள். ஒருவாரம் மருத்துவ மனையிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று சொல்லி விட்டார்கள். - ஒருநாள் ஒன்றிரண்டு தையல்கள் பிரிந்துவிட்டன போலும்! குருதி மிக அதிகமாக வடிந்தது. சலவை செய்த என் பழைய வேட்டி முழுதும் நனைந்துவிட்டது. எங்களுக்கு ஒரே அச்சம். டாக்டர்கள் இருவருமே ஊரில் இல்லை. இரண்டு நாள் கழித்து டாக்டர் நாராயணன் வந்தார்; பிரிந்த தையல்களைச் சரிப்படுத்தினார். நான்கு நாட்கள் அதிகம் தங்க நேரிட்டுவிட்டது. புண் ஆறி பூர்ண குணம் அடைந்தான் சிறுவன். வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டோம். (3) மூன்றாவது முறை வந்ததுதான் பெரிய ஆபத்து. ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் வயிறு உப்பி மந்தம் ஏற்பட்டுக் கால் கைகள் உதறி ஓய்ந்து போய்விட்டான். பேச்சு இல்லை; மூச்சுதான் இருந்தது. வாயில் நுரை துரையாக வழிந்தது. எங்களுக்கு ஒரே பயமாய்ப் போய்விட்டது. ஒட்டமாக ஒடி கோபால கிருஷ்ணய்யரை வாடகைக் காரில் (Taxi) இட்டு வந்தேன். அவரும் திகைத்துப் போய் ஒன்றும் புலப்படாமல் திண்டாடினார். சிறிது நேரத்தில் அதே வாடகைக் கர்ரில் டாக்டர் P. K. நாராயண அய்யரைக் கொணர்ந்தேன். அவரும் திகைத்தார்; இந்த நிலையில் ஊசி போடக் கூடாது என்று சொல்லி விட்டார். உடனே அதே காரில் சா. க.வை