பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களின் வளர்ச்சி - 103. (4) நான் திருப்பதியில் இருந்த பொழுது இராமலிங்கத்தின் உள்ளங்காலில் துருப்பிடித்த ஆணி குத்திச் சீழ்ப்பிடித்துப் பெருந்தொல்லையை விளைவித்து விட்டது. டாக்டர் P. K. நாராயண அய்யர் அப்பகுதியை வெட்டி எடுத்து விட்டு 10 நாட்களில் குணப்படுத்தினார் என்று கடிதம் மூலம் அறிந்து கொண்டேன். இராமகிருஷ்ணன் : இவன் என் இளையமகன். காரைக்குடியில் 22-11-1953இல் பிறந்தான். இவனுடைய குழந்தைப்பருவத்திலும் நான்கு முறை உடற்கோளாறுகள் ஏற்பட்டன. 1. காதுக்கோளாறு : இவனுக்கும் ஒரிரு முறை காதில் சீழ் வடிந்தது. டாக்டர் நாராயண அய்யர் எளிதில் குணப்படுத்தினார். கவலைக்கு இடம் தராத நிலை. 2. நெஞ்சில் மார்புகளுக்கிடையில் பெரிய இரத்தக் கட்டி-தக்காளிப் பழம் அளவுக்கு கிளம்பியது. எங்களுக்கு ஒரே பயம்-இதயத்தைத் தாக்குமோ என்று. என் அன்னையார் பையனை மருத்துவமனைக்கு இட்டுச் சென்றார்கள். டாக்டர் சுப்பிரமணியர்தான் இருந்தார். பையனைச் சோதித்து, ஐயோ, இதில் ஒரு வண்டிச் சீழ் உள்ளது. மாவு வைத்துக் கட்டி நாளைக்கு அழைத்து வாருங்கள்' என்று சொல்லிவிட்டார். அன்றிரவு மாவு வைத்துக் கட்டிவிட்டார்கள். மறுநாள் கட்டை அவிழ்த்துப் பார்த்ததில் கட்டி இருந்த இடமே தென்படவில்லை. மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலையே ஏற்பட வில்லை, . (3) ஒராண்டு காரைக்குடியில் தண்ணிர்ப் பஞ்சம்; அந்த ஆண்டு வானமும் பொய்த்தது. இராமகிருஷ்ண னுக்குத் தலையெல்லாம் வேனல் கட்டிகள், கட்டிகள் இல்லாத இடம் மிகக் குறைவு. புறப்படும்போதே மருத்துவரிடம் காட்டத் தவறிவிட்டேன். சிறிய கட்டிகள் ஒன்று சேர்ந்து பெரிய கட்டிகள்ாயின; வலி தாங்க முடிய