பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置伊要 - நினைவுக்குமிழ்கள்-3 வில்லை. அறுவை சிகிச்சை செய்து சீழ் நீக்கப்பட்டது. பென்சிலின் ஊசி மருந்தைத் தெளித்துக் கட்டினார். விரைவில் குணமாயிற்று. இன்றும் பையன் தலையில் பெரிய வடு இருப்பதைக் காணலாம். - (4) இவனுக்கும் வயிற்றுக் கோளாறு பயங்கரமாக ஏற்பட்டது. அண்ணன் மாதிரியே இவனும் வாயில் துரை தள்ளி பல்லைக் கடித்துக்கொண்டு வயிறு உப்பிக் கிடந்தான். எங்களுக்கு ஒரே பயம். கோபாலகிருஷ்ண அய்யரின் ஒந்தி எண்ணையே குணப்படுத்திவிட்டது. இந்த இரண்டு பயங்கரமான அநுபவங்களும் குளிர் காலத்தில்தான் ஏற்பட்டன. அதிரசங்களை அதிகமாகத் தின்றதால் ஏற்பட்ட விளைவுகள் இவை என்பதை அறிய முடிந்தது. குழந்தைகட்கு எட்டு, ஒன்பது வயது வரையில் மாலை 3 மணிக்கு மேல் அதிரசம் போன்ற எண்ணெய்ப் பொருள்கள் அதிகமாக உண்ணத் தரலாகாது என்பது எனக்குப் படிப்பினை. இந்த நூலைப் படிப்பவர்களும் இப்படிப்பினையைப் பின்பற்றுவார்களாக. . பள்ளியில் இந்தி பயிற்றப்படாததால் வெளியில் இந்தி பிரச்சார சபையால் நடத்தப் பெறும் தனிப் பயிற்சிப் பள்ளியில் படிக்க வைத்து முதல் மூன்று தேர்வு களிலும் வெற்றி பெறச் செய்தேன். இஃது எய்ப்பினில் வைப்பாக இருக்கட்டும் என்றே இரு சிறார்களையும் இந்தி படிக்க வைத்தேன். பள்ளியிலும் இராமலிங்கம் பகுதி-11 தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதம் படிக்கச் செய்தேன். பல மொழிகள் அறிவு பெறுவதால் நன்மையுண்டு என்பது என் கருத்து. 1954 முதல் இராமலிங்கம் முதல் வகுப்பில் சேர்ந்தான்; 1958இல் இராமகிருஷ்ணன் முதல் வகுப்பில் சேர்ந்தான். இருவரையும் 8-ம் வகுப்பு வரை (மூன்றாம் படிவம்) ஒய்வு பெற்ற இடைநிலை பயிற்சி ஆசிரியர் திரு A. இராமசாமி அய்யர் பொறுப்பில் தனிப் பயிற்சி பெறச் செய்தேன். வகுப்பில் பாடங்களில் பிற்போக்கு