உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து மதாபிமான சங்கம் 1 95 நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. 1982 வரை இராமலிங்கத்தையும் 1966 வரை இராம கிருஷ்ணனையும் இந்த ஆசிரியர் நன்கு கற்பித்துக் கல்வி யில் நல்ல அடிப்படை அறிவை உண்டாக்கினார். இப் பெருமகன் நான்கு ஆண்டுகட்கு முன்னர்தான் (1985) மதுரையில் தன் மகன் வீட்டில் திருநாடு அலங்கரித்தார் என்ற செய்திகேட்டு வருந்தினேன். 85-அகவையைத் தாண்டிதான் இப்பூவுலக வாழ்வை நீத்தார் திரு. இராம சாமி அய்யர். W** குமிழி - 1 18 12. இந்து மதாபிமான சங்கம் சிற்றேறக்குறைய அறுபது ஆண்டுகட்கு முன்னர் காரைக்குடியிலுள்ள சில இளைஞர்கள் ஒன்றுகூடி இச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். இந்த இளைஞர்களில் சொ. முருகப்பர், ராய, சொக்கலிங்கம், சா. கணேசன் முக்கியமானவர்கள். இந்தச் சங்கத்திற்கு தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் வந்திருக்கின்றார். சங்கத்தின் மீது ஏழு பாடல்கள் பாடியுள்ளார்.' இச்சங்கம் ஒன்றே பாரதியாரின் பாடல் பெற்றது. இந்த இளைஞர்களுடன் பாரதி ஒளிப் படமும் எடுத்துக்கொண்டார். சங்கக் கட்டடத்தில் உள்ளது. இதில் சொ. முருகப்பா, ராய சொ. , சா. கணேசன் வேறு ஒன்றிரண்டு இளைஞர் கள் உள்ளனர். இந்த மூன்று பெரியார்களின் ខ្ទឹង ដ្យាមៈ តំ கோலத்தை இப்படத்தில் காணலாம். முதல் இது பெரியார் களை விட சா. கணேசன் மிக இளையவர். இவர்கள் 1. பா. க. தனிப் பாடல்கள். இந்து மதாபிமான சங்கத்தார். -