பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 . நினைவுக் குமிழிகள்-3 லும் மூன்று நாள் பணி வீணாகின்றது. பயணம், உணவு மாற்றம் இவை எனக்கு ஒத்துக் கொள்வதில்லை’ என்று கூறினார். மேலும், ரெட்டியார், நீங்களும் அமைதியான போக்கையுடையவராகக் காணப்படுகின்றீர்கள். பள்ளி வளர்ச்சியில் உங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர் கள். அதிகமாகப் பேசாதீர்கள்: கூட்டத்திற்குப் போவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் படியுங்கள்; எழுதுங்கள். இப்பழக்கம்தான் உங்கள் வாழ்வை வளமாக்கும்’ ’ என்றும் அறிவுரை-அறவுரை - கூறியது இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. அதை மறைமொழிபோல் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றேன். காரைக்குடியில் இருந்த வரையில் செட்டிப் பெரு மக்களிடம் நான் நன்கு பழகியவரை நான் அவர்களிடம் கண்டவற்றை நினைவுகூர்கின்றேன். பெரும்பாலோர் தேசபக்தி மிக்கவர்கள்; தமிழ்ப்பற்றும் சமயப்பற்றும் மிக்கவர்கள். சிவம் பெருக்கும் சிலர்கள். சிவன் கோயில் மேற்கு வீதியில் நிலையாக அமைக்கப் பெற்றிருக்கும் அறுபத்து மூவர் திருமடமும், இந்து மதாபிமான சங்கமும் நிலையான சான்றுகளாகும். எல்லோருமே. - நண்ணியெல்லாப் பொருளினும் உட்பொருளாய்ச் செய்கையெலாம் நடத்தும் வீறாய்த் திண்ணியநல் அறிவொளியாய்த் திகழுமொரு பரம்பொருளை அகத்தில் சேர்த்துத் (I) திகழ்பவர்கள். இவர்களைப் பற்றி அறிவுரையும் அருளுரையும் பொதித்த போக்கில் சங்கத்தின் மீது பாடிய பாடல்களை நினைவு கூர்கின்றேன். - செய்கையெலாம் அதன்செய்கை நினைவெல்லாம் அதன் நினைவு தெய்வ மேநாம் . உய்கையுற தாமாகி நமக்குள்ளே யொளிர்வ'தென உறுதி கொண்டு