பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** * * இந்து மதாபிமான சங்கம் 111 நான் காரைக் குடியிலிருந்தபோதே ராய.சொ. வின் வாழ்க்கைத் துணைவி உமையாள் ஆச்சி சிவப்பேறு அடைந்தார்கள். ஆகவே ராய. சொ. அமராவதி புதுரர் இல்லத்தை-ஒர் ஆசிரமம் போல் இருந்த இல்லத்தைவிற்று விட்டுக் காரைக்குடியிலேயே தங்கி விட்டார்கள். ஒரு கணிசமான தொகையை சங்கத்திற்கு அர்ப்பணம் செய்தார்கள். அதைக் கொண்டும் போதாதற்குச் சங்க நிதியில் சிறிது எடுத்தும் சங்கக் கட்டடத்தின்மேல் ஒரு மண்டபம் எழுப்பினார்கள். இஃது இன்று ராய.சொ. உமையாள் மண்டபம் என்ற பெயரால் வழங்கி வரு கின்றது. அதில் சமைப்பதற்குத் தனியறையும் படுப்பதற் குத் தனி அறையும் (கழிப்பறையுடன் கூடியது) நடுவில் விசாலமான அறையும் (Hall) அமைத்தார்கள். இந்த விசாலமான அறை சிறிய கூட்டம் (50 பேர்) நடைபெறு வதற்குப் போதுமானது. எஞ்சிய வாழ்நாளை ஒரு சமையல் ஆள் உதவியுடன் வாழ்ந்து சிவப்பேறு அடைந் தார்கள். (30.9.1974 இரவு 9 மணி.), இவரோடு உரை யாடும்போது பொழுது போவதே தெரியாது. பேச்சு முழுவதும் இலக்கியத்தில்-குறிப்பாக பக்தி இலக்கியத் தில்-தோய்ந்தே இருக்கும். . சங்கத்துச் சான்றோர்களில் சிலரைத் தான் இப்போது நினைவு கூர முடிகின்றது. - 1. கா. காடப்பச் செட்டியார் : இவர் குன்றக்குடிக் கருகிலுள்ள ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். செல்வச் செழிப்புள்ளவர். ராய. சொ. விடம் பெருமதிப் புடையவர். தமிழ்ப்பற்றும் சிவப்பற்றும் மிக்கவர். சங்கத்து நிர்வாக சபையில் சில ஆண்டுகள் பணியாற்றி னார். நிர்வாக சபைக் கூட்டத்திற்குத் தவறாது வருபவர். ராய.சொ. நடத்தி வந்த வில்லி பாரதத் தொடர் கூட்டத்திற்கும் சனி தோறும் தவறாது வந்திருந்து கேட்டுப் பயன் பெற்றவர். கொட்ை வள்ளல். - என்மீது பேரன்புடையவர். . -