பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # 3 நினைவுக் குமிழிகள். 2. இராமநாதன் செட்டியார் : இருப்பூர்தி நிலைய: சாலையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்தவர் படிப்பு குறைவாக இருப்பினும் கேள்வி ஞானம் மிக்கவர் ராய. சொ.விடம் பேரன்புடையவர். இவர் திருமேனி இருந்த வரை மாலை நேரத்தில் நாள்தோறும் சங்கத்தில் இவரைக் காணலாம். ஒரு சமயம் ராய. சொ. அவர் கட்கு அளித்த விருந்தொன்றில் பல நண்பர்களுடன் அடியேனும் கலந்து கொண்டது நினைவில் உள்ளது. பழகு வதற்கு இனியவர். ராய. சொ. தொடர்புள்ளவர்களிடம் பேரன்பு கொண்டவர். நான் திருப்பதி சென்ற பிறகு சிவப்பேறு அடைந்ததாகக் கேள்வியுற்றேன். சங்கத்தில் ஆயுள் உறுப்பினராக இருந்தவர். 3. சொக்கலிங்கம் செட்டியார் : மகர்நோன்பு பொட்டலுக்கு (காந்தி சதுக்கம்) அருகில் முதல் தெருவில் ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்தவர். கும்பகோணத்தில் இவருக்கு அரிசி ஆலை உண்டு. பெரும்பாலும் அங்கேயே இருப்பார். காரைக்குடி வந்து சில மாதங்கள் தங்குவார். அப்போது சங்கத்திற்குத் தவறாது எழுந்தருள்வார். செம்மை நிறத் திருமேனி. சிவபூசை எடுத்தவர். கழுத்தில் அக்கமணி அணிந்திருப்பார். இப்போது இவர் சிவலோகத் தில் வாழ்கின்றார். 4. திருப்பூர் நாராயணன்: இளைஞர். தமிழ்ப் பற்று மிக்கவர். கேள்வி ஞானந்தான் அதிகம். சங்கத்தின் உறுப்பினர். நிர்வாகசபை உறுப்பினராகவும் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். நான் காரைக் குடியிலிருந்த காலத்திலேயே இறைவன் திருவடி நிழலை அடைந்தார். 5. அபிசீனியா பழ. நாச்சியப்பன்: செயல் திறம் மிக்கவர். ராய சொ. விடம் பேரன்பு மிக்கவர், ராய.சொ. இடும் பணியைத் திறம்பட நிறைவேற்றுவார். அவர் வெட்டிக் கொண்டு வா’ என்றால் இவர் கட்டிக் கொண்டு வருபவர். பர்மாவில் நேதாஜி படையில் (INC)