பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 4 நினைவுக் குமிழிகள்-3 அன்பும் பாசமும் உள்ளவர். எந்தத் திருக்கோயில் விழாக்க ளாயினும் தோள் கொடுத்து முன்னின்று நடத்துவதில் நேசமும் மகிழ்ச்சியும் கொள்பவர். செல்வச் செழிப்பு மிக்கவர், இப்போது கம்பன் சேவையில் களிப்பெய்து கின்றார். - - 8. திருநாவுக்கரசு செட்டியார் : பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள செல்லப்பச் செட்டியார் வீதி யிலுள்ள இல்லத்தில் வாழ்ந்தவர். தமிழறிவு மிக்கவர். நல்ல இசையுடன் பாடல்களைப் படிப்பவர். சங்கத்துக்கு அடிக்கடி வருபவர். ராய. சொ. வில்லிபாரதம் நடத்தின போது இரண்டாண்டுக்குமேல் இவர்தாம் பாடல்களை நன்கு படிப்பார்; படிப்பது மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இவர் இப்போது சிவப்பேறு அடைந்து விட்டார். 9. சொக்கலிங்கய்யா: சிறந்த தமிழறிஞர். சங்கத்தில் தொடக்க காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நான் காரைக் குடிக்குச் சென்றபோது இவர் சிவப்பேறு அடைந்திருந்தார். இவரது திருமகனார் திருநாவுக்கரசு செட்டியார்தான் சங்கத்திற்கு அடிக்கடி வருபவர். (இப்போது செப்டம்பர்-89-இவர் இல்லை). கழுத்தில் ஒர் அக்க மணியுடன் திகழ்பவர். சிவப்பழம்; சத்துவகுண மிக்கவர். சில சமயம் இவருக்கு மூக்குக்குமேல் கோபம் வருமென்று சொல்வார்கள். நான் இதைக் கண்டதே இல்லை. 10. சொக்கலிங்கம் செட்டியார் : புதுக் கோட்டை யைச் சேர்ந்தவர். அங்கு வட்டித் தொழிலுடன் வேறு ஏதோ தொழிலையும் செய்து வருபவர். சங்கத்தில் ஆயுள் உறுப்பினர். காரைக்குடிக்கு வரும் போதெல்லாம் சங்கத்திற்கு வந்து ராய.சொ. வைச் சேவிப்பவர். மாலை நேரத்தில் கடமைகளை முடித்துக் கொண்டு நெற்றியிலும் உடலிலும் திருநீற்றுக் காப்பணிந்து சங்கத்தில் அமர்ந் திருக்கும்போது பார்த்தால் சிவப்பழமாகக் காட்சி' அளிப்பார். கரிய திருமேனி, சற்றுப் பருத்த திருமேனியர்