பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து மதாபிமான சங்கம் - 罩夏5 திருநீற்றுக் காப்பு சற்று வசீகரமாக இருக்கும். சாந்த சொரூபி. ஒரு சமயம் மாலை நேரத்தில் திருநீற்றுக் காப்புடன் சங்கத்தில் அமர்ந்திருந்தபோது ராய.சொ. இவரை நோக்கி, என்ன சொ. உங்களைப் பார்த்தால் முனியாண்டி விலாஸ் சோற்றுப் பானைக்குப் பட்டை தீட்டிய மாதிரி காணப்படுகின்றீர்கள்!” என்று நகைச் சுவையை உதிர்த்தார். எல்லோரும் ராய.சொ. வின் உவமையைக் கேட்டு மகிழ்ந்தனர். சொ. அவர்களும் எல்லோருடனும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார். 1 . . சொ. நாராயணன்: சொ.நா. என்றால் தான் அனைவருக்கும் நன்கு தெரியும். சிவநேசச் செல்வர். காரைக்குடி, முத்துப்பட்டணம், கீழ வீதியில் ஒர் இல்லத் தில் குடியிருப்பு. வில்லிபாரதம் கேட்கத் தவறாது சங்கத்துக்கு வருவார். வருமானவரி கணக்குத் தணிக்கை யாளர் தொழில். தொழிலில் நேர்மையுள்ளவர். என் மனைவி கணக்கைப் பதினைந்து ஆண்டுகள் பார்த்தார். அதன் பிறகு வரி இல்லாது போய் விட்டது. சங்க ஆயுள் உறுப்பினர். சங்கக் கணக்கிற்கும் தணிக்கையாளர் இவர். இப்போது சிவப்பேறு அடைந்தவர். 12. திருப்பதி செட்டியார்: சங்க உறுப்பினர், முத்துப் பட்டணம் மேல் வீதியில் ஒரு பெரிய மாளிகையில் வசிப்பவர். ராய. சொ. மீது பேரன்பு மிக்கவர். இலக்கியச் சுவைஞர். ஒரு சமயம் ராய.சொ. வுக்கு இவர் வைத்த விருந்தில் அடியேனும் கலந்து கொண்டதாக நினைவு. 13. ராய. சிதம்பரம் செட்டியார்: ராய சித. என்று தான் வழங்குவார்கள். சங்கத்தில் ஆயுள் உறுப்பினர்; சில ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராகவும் பணி யாற்றியவர். செல்வச் செழிப்புள்ளவர். குழந்தைப் பேறு இல்லை. ஒரு நல்ல பையனைத் தத்துஎடுத்துக் கொண்டார். நான் திருப்பதியில் இருந்தபோதே சிவப் பேறு அடைந்துவிட்டார். - - -