பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X பல பத்திரிகை ஆசிரியர்களை உருவாக்கிய நகர். நாடெங்கும் நற்பணிகள் பல செய்யும் நகரத்தார்கள் வாழும் நன்னகர், இத்தகு திருநகரில் தாம் வாழ்ந்த காலங்களை எண்ணி நினைவலைகளைப் பதிவு செய்கிறார் அறிஞர் சுப்புரெட்டியார். ஒவ்வொரு நினைவுக் குமிழியிலும் ஒரு பெரிய அல்லது ஒரு சிறிய நிகழ்ச்சி அமைந்திருக்கும். ரெட்டியாரின் கைவண்ணத்தால் அவை உயிரோவியம் ஆகின்றன. காரைக்குடியின் கதையினை, பெருமக்கள் வாழ்வினை, கல்வி நிலையங்களின் வளர்ச்சியினை, சான்றோர்களின் சால்புகளை, அறிஞர்களின் அறிவுரை * @gYf கவிதை அழகுடன் கல்வெட்டுகளாக்கித் தருகிறார்கள். அவர்கள் கண்ட காட்சி ஒன்றா?இரண்டா? ஒராயிரமல்லவா! மனிதர்களின் சாதனைகள் எத்தனை எத்தனையோ? தனித்தனி வளையங்களாக அவை வட்ட மிடுகின்றன. ஒர் ஆசிரியர் நல்லாசிரியர் பேராசிரியர் உருவான கதையை பொன் இழைச் சரடாக இந்நூலுள் இழையோடுகிறது. பத்துப் பக்கம் கூட எழுதமுடியாத பெருமக்கள்’ வாழும் இந்நாளில் பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் பல்லாயிரம் பக்கம் எழுதிச் சாதனை செய்தவர் ஆகிறார். பழைய நிகழ்ச்சிகளை அசைபோடாமல் அந்நிகழ்ச்சிகள் இன்றுவரை வளர்ந்துள்ள பாங்கினையும் படம் பிடித்துக் காட்டுகிறார். திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் இவருடன் பேராசிரியர் பதவிக்குப் போட்டி யிட்ட குமாரசாமி ராசா அண்மையில் ஆகஸ்ட்-89 காணாமல் போன கதையைக்கூட கலையழகுடன் விவரிக்கும் திறம் வியப்பிற்குரியது. திரும்பிப்பார்க்கிறார், நிகழ்ச்சிகளை நெஞ்சில் நிறுத்துகிறார். ஒவியங்களாக வரைந்து நம் மனக்கண் முன் உலவ விடுகிறார். இது ரெட்டியாரின் நினைவாற்றலையும் எடுத்துச் - சொல்லும் திறமையினையும் எழுத்தாற்றலையும் புலப்படுத்துகிறது.