பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 6 நினைவுக் குமிழிகள்-3 14. தேவராயன் செட்டியார் : சங்கத்து ஆயுள் உறுப்பினர். ராய. சொ. அவர்களிடம் பேரன்பு கொண்டவர். இலக்கியச் சுவைஞர். முத்துப் பட்டினத்தில் வாழ்பவர். இவர் ராய. சொ.வுக்கு ஒருமுறை அளித்த விருந்தில் அடியேனும் பங்கு கொண்டவன். அடியேன்பால் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டவர். இவர்தம் திருக் குமாரன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிலக் கூற்றியல் (Geology) துறையில் அதன் தலைவராகவும்: பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். எத்தனையோ நண்பர்கள் நினைவில் உள்ளனர். பெயர் நினைவு இல்லை. காரைக்குடியில் இருந்தவர் சுற்றுப்புற ஊர்களில் உள்ள பெரிய இடத்துத் திருமணங்கட்கு எல்லாம் ராய. சொ. எனக்கு அழைப்பு அனுப்பச் செய்வார்; தன்னுடன் என்னையும் கூட்டிச் செல்வார். அவர் வெளியிடும் நூல் கட்கு நான்தான் பார்வைப் படிவங்களைச் (Proots) சரி பார்ப்பேன். இராயவரம் குழந்தையன் செட்டியார் மகன் திருமணத்தில் ஆழ்வார் அமுது (நாலாயிரத்தில் 460 பாசுரங்களின் தொகுப்பு) என்ற நூல் இலவசமாக வழங்கப் பெற்றது. அந்த நூல் புதுக்கோட்டையில் அச்சாயிற்று.பார்வைப் படிவங்களைச் சரிபார்க்க என்னை அழைத்துச் சென்றார். அச்சக உரிமையாளர் சக்தி செட்டியாரின் விருந்தினர்களாக நான்கு நாட்கள் தங்கின. தாக நினைவு. ராயவரத்தில் நடைபெற்ற திருமணத் திற்கும் என்னைக் கூட்டிச் சென்றார்கள். இதனால் குழந்தையன் செட்டியார், சக்தி செட்டியார் இருவரது அன்பிற்கும் நட்பிற்கும் பாத்திரமானேன். இவர்கள் இருவரும் இப்போது (1989) இல்லை; சிவப்பேறு அடைந்து விட்டார்கள். இருவருமே செல்வச் செழிப்புடையவர்கள். ராய, சொ. வின் கூட்டுறவால் என்னுடைய சமூக உறவு செட்டி நாட்டில் விரிந்தது.