பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 8 நினைவுக் குமிழிகள்-3 பிற துறை மாணாக்கர்களும் ஒத்துழைத்ததால் தமிழ்த். துறைக் கண்காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்தது. எந்த நிகழ்ச்சியானாலும் நம் நாட்டில் விநாயகப் பெருமானை முன் வைத்துதான் அது தொடங்கப் பெறுவது மரபாக, இருந்து வருகின்றது. அது போலவே கல்லூரி வளாகத்தில் தமிழ் என்றாலேயே சா. கணேசன் தோன்றுவார். அவர் இல்லாவிட்டால் பருப்பு இல்லாத கல்யானந்தான். பொருட்காட்சி தொடங்குவதற்குமுன் திட்டம் தீட்டப் பெறல் வேண்டும். இத்திட்டம் சா. க. இல்லத்தில் கருக் கொண்டு உருப் பெற்றது. நானும் அவரும் ஒருவாரம் சிந்தித்து திட்டத்தை உருவாக்கினோம்; பின்னர் செயற். படுத்தினோம். இத்திட்டத்தில் (1) எழுத்து வ ள ர் ச் சி. வட்டெழுத்து முதல் இன்றைய அச்செழுத்து வரை-விளக்கப் படங்கள்; (2) எழுதும் கருவிகள்: எழுத்தாணி முதல் இன்றைய பல்வேறு எழுது கருவிகள்; (3) எழுதும் தளம்; பனை ஓலை முதல் AIR MAIL தாள் வரை, (4) இலக்கியங்கள், பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களும் வரைவு விளக்கங்களும்; பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள்: ஐம்பெருங்காப்பியங்கள்; ஐஞ்சிறு காப்பியங்கள், காவியங்கள், புராணங்கள்; பக்தி இலக்கியம்-சைவம், வைணவம்; பதி நான்கு சாத்திரங்: கள்; வைணவ சாத்திர நூல்கள்; பண்டார சாத்திரங்கள். சிற்றிலக்கியங்கள்-துரது, உலா, பிள்ளைத் தமிழ், மடல் முதலியவை: பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ச. து. யோகியார், சுத்தாநந்த பாரதியார்; நாடக நூல்கள், நாட்டுப் பாடல்கள்- இவை கிடைத்தவரை பாகுபடுத்தி வைக்கப் பெற்றன (அஸ்பெஸ்டாஸ் கூரை வேயப் பட்ட கட்டடத்தில். o துறைக்குரிய வகுப்பறைகளில் பெரும்பாலும் வரை படங்களே காட்சி ஒழுங்கில் அமைத்திருந்தோம். ஐந்திணை-விளக்கம்; ஐவகை நிலங்கள்-வண்ண ஒவியங்