பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 -- - ---- - நினைவுக் குமிழிகள்-3 செழிப்பாக வளர்ந்திருந்தனர்; ஒன்றிரண்டு மாதங்களில் குலைகள் தள்ளும். இவை யாவும் சாய்ந்து, ஒடிந்து பாழா யின. பிறகு நான் காரைக்குடியிலிருந்த வரை வாழை வளர்ப்பதையே விட்டொழித்தேன். - - பின்னர் 1962-இல் பொறியியல் கல்லூரியில் மீண்டும் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. இப்பொழுது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. கல்லூரியின் வயது பத்தா தலால் வசதிகள் பெருகி இருந்தன. இதனால் பொருட் காட்சியை மிகச் சிறப்பாக அமைக்க முடிந்தது. என் குடும்பம் 1966-வரை காரைக்குடியில் இருந்தமையால் நான் திருப்பதியிலிருந்து காரைக்குடி வந்திருந்தேன். பொருட்காட்சியையும் பார்க்கச் சென்றிருந்தேன். யாரோ மத்திய அமைச்சர் ஒருவர் வந்திருந்தார் பல்கலைக்கழக ஆணையமும் வந்திருந்தது. தாளாளர் C. W. CT. W. வேங்கடாசலம் செட்டியார் எல்லோரையும் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார், நானும் அவர்களுடன் சேர்ந்து சுற்றினேன். அந்தக் காலத்தில் அழகப்பர் நிறுவிய அறம் பொருளாதாரத் தட்டுப்பாட்டால் தொல்லைப்பட்டது. கடனுக்காகப் பல சொத்துகள் விற்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். C. W. CT. W. வேங்கடாசலம் செட்டியாருடன் சுற்றி வந்து கொண்டிருந்த போது அழகப்பர் அறத்தின் பொருளாதார நிலையில் ஏதாவது முன்னேற்றம் உண்டா? என்று கேட்டேன். மிஸ்டர் ரெட்டியார், முன்னர் நாம் ஆண்டுதோறும் கடன்தொகை வட்டிக்காக எழுபது ஆயிரம் கட்ட வேண்டியிருந் தது, இப்போது நமக்கு எழுபதாயிரம் வட்டி வருகின்றது’’’ என்றார் கணிதத்தில் வரும் வாய்பாடு (Formula) போல் தெளிவாக்கியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதற்குமேல் விளக்கம் என்னைப் போன்ற மூன்றாவது மனிதருக்குத் தேவையும் இல்லையே. திருப்பதியில் என். நிலத்தையும் விசாரித்தார். குடும்பம் காரைக்குடியில் தான் உள்ளது; 1966-வரை மாற்றுவதற்கில்லை