பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வராசனின் திருமணம் - 121 அங்குத் தமிழ் படிக்கப் பள்ளியில் வாய்ப்பில்லாததால்’’ என்று கூறினேன். பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன். நான் நடைமுறைப் பொருளாதாரப் பேராசிரியர் (I am a Professor of Practical Economics) ’’ grgärty geboolo glgië, Elgië சொல்லிக் கொள்வார் செட்டியார் . இதனைச் சிந்தித்து அசை போட்ட வண்ணம் வீடு வந்து சேர்த்தேன். குமிழி-120 14. செல்வராசனின் திருமணம் சிேன் துறையூரில் இருந்தபோது செங்காட்டுப்பட்டி யிலிருந்து நா. செல்வராசன் என்ற நன் மாணாக்கன் துறையூரில் படித்தான். அவனைச் சேர்த்தவர் அவனது பெரியப்பா, அடிக்கடிப் பையனைப் பார்க்க வரும் போதெல்லாம் என்னைச் சந்தித்துப் பேசாமல் போக மாட்டார். இதனால் அன்பும் பாசமும் எங்களிடையே வளர்ந்தன. பையனும் மிக அன்புடன் பழகினான். பள்ளி யிறுதித் தேர்வினை முடித்துக் கொண்டு கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் பெற்றான். நான் காரைக்குடியில் பணியேற்ற பிறகு பி. டி. படிக்க காரைக்குடியில் வந்து சேர்ந்தான். காரைக்குடியிலும் என்னிடம் மிக்க அன்புடன் பழகினான். . . பயிற்சிக் கல்லூரியில் படித்தபோது அவனுக்குத் திருமணமும் கூடியது. சற்றுச் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். பின்-குமரப் பருவக் காலத் தில்-கல்லூரி வாழ்வில்-குறிக்கோளும் கொள்கையும்