பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வராசனின் திருமணம் 123 வாடகைக் காரில் சென்று திருமணத்தை முடித்துக் கொண்டு அதே காரிலேயே திரும்பி விடலாம்' என்று மேலும் கூறினேன். கணேசப்பெருமான் ஆசி கிடைத்தது. திருமணம் நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்ன தாகவே செல்வராசன் செங்காட்டுப்பட்டி சென்று விட் டான். என்னிடம் ரூ. 200 தந்து சா. கணேசனைக் கூட்டி வரும் பொறுப்பினையும் என்னிடம் விட்டான். திருமணத் திற்கு முதல் நாள் மாலை 4 மணி வண்டியில் திருச்சி சென் றோம். இருப்பூர்தி சந்திப்புக்கு அருகிலுள்ள அசோக் பவன்' என்ற விடுதியில் அறைகளைத் தனித்தனியாக அமர்த்திக்கொண்டு அவற்றில் தங்கினோம்; இரவு சிற்றுண்டியை விடுதியில் முடித்துக்கொண்டோம். விடுதி T.M. நாராயணசாமிபிள்ளை மகன் கேப்டன் T. N. இராமசாமியின் பொறுப்பில் இருந்தது. இராமசாமியின் உதவியால் அதிகாலை ஐந்து மணிக்கு செங்காட்டுப் பட்டி சென்று பிற்பகல் திரும்ப ஒரு வாடகைக் கார்பேசிக் கொண்டேன். இராமசாமியும் கம்பனடிப் பொடியுடன் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார். மறு நாள் அதிகாலையில் 4 மணிக்கு இருவரும் எழுந்து காலைக்கடன்களையும் நீராடலையும் முடித்துக்கொண்டு பயணத்திற்குத் தயாரானோம். வாடகைக்காரும் விடுதி வாயிலில் தயாராக வந்து காத்திருந்தது. பயணம் செங்காட்டுப்பட்டி ஏரி வரை நன்றாக அமைந்தது. முதல் நாள் மாலை சிறிது மழை பெய்திருந்ததால் ஏரிக்கரை ஏற்றத்தில் சற்றுச் சிரமம் இருந்தது. மண் சாலையா.த. லால் சிறிது வழுக்கல்; ஏரிக்கரை ஏற்றத்தில் நாங்களும் அருகிலிருந்த வேறு சிலரும் வண்டியைத் தள்ளிக் கரையில் ஏற்றினோம். பிறகு சரளை கொட்டப்பெற்றிருந்ததால் வழுக்கலின்றி 7 மணிக்குச் செங்காட்டுப்பட்டியை அடைந்தது வண்டி. செல்வராசனும் அவன் தந்தையும். எங்களை வரவேற்று சிற்றுண்டி கொள்ளச் செய்தார். 8-9.30 மணிக்குத் திருமணம் நடைபெற வேண்டும்.