பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வராசனின் திருமணம் 巫 25 திண்ணையில் அமர்ந்தோம். பெரகம்பியிலிருந்து என் னுடன் திண்னைப் பள்ளியில் படித்த பல தோழர்கள், பெரியவர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் உரை யாடி மகிழ்ந்தேன். அவர்கட்கு இவரை என் வாழ்க்கை யில் திருப்பம் செய்த நடமாடும் கணேசப் பெருமான்’’ என்று அறிமுகம் செய்து வைத்தேன். திருமணத்திற்கு வந்திருந்த ஆடவர், மகளிர், சிறுவர்கள் அனைவரும் காந்தியடிகளைத் தரிசித்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடை வார்களோ சா.க. வைக்கண்டு அவ்வளவு மகிழ்ச்சியடைந் தனர். திருமண விருந்து தொடங்க 12-30 மணி ஆகும் போல் இருந்தது. 1130 மணிக்கே எங்கள் இருவருக்கும் அமுது படைக்கப் பெற்றது. 12 மணிக்கு மணமக்களிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம். வழியில் இறக்க மாதலால் முன்பு ஏற்பட்ட தொல்லையில்லை. வண்டி யும் நல்ல நிலையிலிருந்ததால் வண்டியோட்டி பகல் 1-15 க்கு இருப்பூர்தி நிலையத்திற்கு எங்களைக்கொண்டு வந்து சேர்த்து விட்டார். காலையிலேயே அறைகளைக் காலி செய்து விட்டதால் விடுதிக்குப் போகாமல் நேராக இருப்பூர்தி நிலையத்திற்கு வந்துவிட்டோம். வண்டி யோட்டிக்கு வாடகையைத் தந்து விட்டு, முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியேறி விட்டோம். வண்டியில் கம்பன் அடிப்பொடி, மணமகன் தி.மு.க, , சார்புடையவர்போல் தோன்றுகின்றதே! என்றார். எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?' என்று வினவினேன். "நாம் காலையிலும் பகலிலும் உண்ட வீட்டில் பெரியார், அண்ணாத்துரை படங்கள் இருந்ததைக் கண்டேன்; அதனால்’’ என்றார். அருகில் காந்தி, புத்தர் படங் களும் இருந்தனவே' என்றேன். மேலும் இவற்றைக் கொண்டு ஒருவரை ஒரு கட்சிச்சார்புடையவர் என்று கருதுதல் கூடாது. இளமை உள்ளங்கள் எப்படி எப்படியோ மாறும் தன்மையுடையது. சிலர் கொள்கை களில் நல்லனவற்றையும் கொண்டு கட்சியில் ஈடுபாடு