பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi பல நிகழ்ச்சிகளைப் பின்னினைந்து பெருமைப்படுகிறார். சிலரின் பிரிவுக்கு இரங்கி ஏங்குகிறார். ஒவ்வொரு குமிழியும் ஒரு வகையில் நம் உள்ளத்தில் ஒரு அசைவினை உருவாக்குகிறது. அவர்காலத்தில் வாழ்ந்த அறிஞர்களைப் பற்றிய அடுக்கடுக்கான செய்திகள் பெருமக்களைப்பற்றிய மதிப்பீடுகள் நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை. டாக்டர் ரெட்டியாரின் உயர் கல்விப் பணிக்குப் பிள்ளையார் சுழி போட்ட சா. க. வைப்பற்றிய சில நினைவுகள்: காரைக்குடியில் மிகவும் பிரபலமானவர் சா. கணேசன். காந்திவழி நிற்பவர்; நாட்டுப் பற்று மிக்கவர். பலமுறை சிறைக்குச் சென்றவர் (பக்-166) ...... நாற்பது ஆண்டுகட்குமேல் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்தவர். காரைக்குடிக் கம்பன் திருநாள் இவர்தம் திருத்தொண்டு. கம்பனுக்கு ஒரு மணி மண்டமும் தமிழன்னைக்கு ஒரு திருக் கோயிலும் கட்டி முடித்த திருத்தொண்டர் . கம்பன் மேல் அளவற்ற ஈடுபாடுகொண்டு கம்பன் அடிப் பொடி ஆனவர் (பக்-1 67)....... என் எல்லா நூல் களின் கைப்படிகளிலும் இவர்தம் கைவண்ணத்தின் பங்கு உண்டு. பெரும் பகுதிகளைப் படித்துத் திருத்தங்களைக் கூறிச் செம்மைப்படுத்தியவர் (பக் 167)... நூல்களைப் பொறுத்தமட்டிலும் இவர்தம் திருக்கை இராசியான கை என்பது என்கணிப்பு. ஊரில் நடைபெறும் எல்லாத் திருவிழாக்களிலும் இவர் பங்கு உண்டு. சுவாமியின் திருமேனியை வாகனங்களில் ஏற்றி அலங்காரம் செய்வதில் அருகி லிருந்தே ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கலை யுணர்ச்சியுடன் குறிப்புகளைத் தந்து செம்மைப் படுத்துபவர். சீவகனை நந்தட்டன் முதலிய எட்டு நண்பர்கள் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல் பல தன வைசிய இளைஞர்களும் பிற வகுப்பு இளைஞர்களும்