பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繁 குன்றக்குடி அடிகளார் 127. சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவருக்குப் பெரும் பொறுப்பு நல்கி இவரைக் கெளரவித்தார். அண்ணா இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பாராயின் இவரை அமைச்சரவையையும் அலங்கரிக்கச் செய்திருப்பார். சிறிது நேரம் கம்பனடிப் பொடி இல்லத்தில் தங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். பக்கத்துச் சந்து வழியாக அவர் வீட்டிற்குப் பின்புறம் அடுத்த வீதி யிலுள்ள என் இல்லம் அடைந்தேன். குமிழி-121 & 15 குன்றக்குடி அடிகளார் ருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பரமா சாரிய சுவாமிகள் (குன்றக்குடி) என்பது இவரது திருப் பெயராகும். பொதுமக்கள் நீளமான பெயர்களை விரும்புவதில்லை. சொற்சுருக்கத்தையே விரும்புவது கண்கூடு. இதுதான் சொல்லுவதற்கு எளிதாக இருக்கும். கிருட்டினசாமியைக் கிட்டு , கிச்சான் என்றும், வேங்கட சாமியை வெங்கிட்டு என்றும், பார்த்தசாரதியைப் பார்த்தன், பாச்சு என்றும் அன்றாட வழக்கில் மக்கள் குறிப்பிடுவதைக் காணலாம். தொடக்கத்தில் பேருந்துகள் தேசிய மயமாக்கப் பட்டபோது அவை பல கழகங்களின் பெயர்களில் அடங்கின. அவை மிக நீளமாக இருந்தமை யால் அரசே அநுபவத்தில் சுருக்கிக் கொண்டது. எடு: