பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星露& நினைவுக் குமிழிகள்- శ్రీ நீளம் சுருக்கம் திருவள்ளுவர் போக்கு திருவள்ளுவர் வரத்துக் கழகம் - பல்லவன் போக்கு வரத்துக் பல்லவன் கழகம் பாண்டியன் போக்கு பாண்டியன் வரத்துக் கழகம் சோழன் போக்கு வரத்துக் சோழன் கழகம் நீளப் பெயர்களை ஒவ்வொரு பேருந்திலும் எழுது வதற்கு சாயங்கள், துாரிகை எழுதும் நேரம், எழுத்துக் கூலி இவற்றிற்கு எவ்வளவு செலவு? இவற்றையொட்டியே பேரறிஞர் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் என்று தொடக்கத்தில் சூட்டப் பெற்ற பெயர் அண்ணா பல்கலைக் கழகம்’ என்று சுருக்கிக் கொள்ளப் பெற்றது. இதனால் அநுபவத்தால் பெறக் கூடிய அறிவே சிறந்தது. என்றாகின்றது. இது கருதியே நீளமான பெயர்ை குன்றக்குடி அடிகளார்’ என்று சுருக்கமாக வழங்கப் பெறுகின்றது; மக்கள் வழங்கி அதையே வழக்கிற்கும் கொண்டு வந்து விட்டனர். தருமபுர ஆதீனத்தின்கீழ்க் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர்தான் திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவ ரானார். நான் காரைக்குடி சென்ற (1950) சில மாதங் கட்கு முன்னர் (அல்லது ஒராண்டுக்கு முன்னர்) தான் குன்றக்குடியில் பதவி ஏற்றார் என்பதாக நினைவு. அடிகளார் மடாதிபதிகளுள் ஒரு பெரும் புரட்சியாளர், தமிழ்ப் பற்று மிக்கவர் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவர்; திருக்குறள்பால் ஈடும் எடுப்புமற்ற காதலர். குன்றக்குடிக்கு வந்த புதிதில் அப்பகுதியிலுள்ள எல்லா மேடைகளிலும் தோன்றுவார். பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களிலும் தொடக்க விழாக்களிலும் இவர்