பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 Ö நினைவுக் குமிழிகள்-3 தற்கு அடையாளமாக அப்பெயர் பொறிக்கப் பெற்ற பொற்காசுகளை அணிந்து கொள்வது வழக்கம். பண்டித மணி நடந்து செல்லும்போது சற்று விலகிய நிலையில் கோவிந்தசாமிப் பிள்ளையும் (இவர் பண்டிதமணியின் சீடர்) நடந்து சென்று கொண்டிருந்தார். பண்டிதமணி, கோவிந்தசாமி பிள்ளை, இங்கே அருகில் வாரும். கழுத்தில் ஏதோ தொங்குகின்றதே அதைப் பார்ப்போம் : என்று கூறி அழைத்தார். அவரும் நெருங்கி வந்தார். தொங்குகின்ற பொற் காசைப் பார்க்கும்போது ஆதீனப் பெயருடன் நாதஸ்வரவித்துவான்' என்றும் பொறிக்கப் பெற்றிருந்ததைக் கண்டார். கோவிந்தசாமிப் பிள்ளை, நீர் என்னிடம் தமிழ்ப் படித் தீர்; நினைவிருக்கின்றது. நாதஸ்வரத்தை எங்கு எப்பொழுது யாரிடம் கற்றுக் கொண்டீர்?' என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு அவர் மாற்றிக் கொடுத்து விட்டார்கள் போலிருக் கின்றது; முட்டாள்தனமான காரியம் நடந்து விட்டது” ான்றார். பின்னர் பண்டிதமணி கோவிந்தசாமிப் பிள்ளை, மடத்து நிர்வாகிகள் முட்டாள்கள் என்பது உலகறிந்த செய்தி. அவர்கள் கொடுத்தாலும் நீராவது பார்த்து வாங்கிக் கொள்ளக்கூடாதா? உமக்குப் புத்தி எங்குப் போயிற்று? எத்தனை ஆண்டுகளாக இதனை மாட்டிக் கொண்டு திரிகின்றீர்களோ?' என்று சற்றுக் கடிந்தே அறிவுறுத்தினார். இதனால் குரு-சீடர் உறவு தெளிவானது: முதுமைப் பருவத்திலும் இந்த உறவு நீடித்ததைக் காண பெருமையாக இருந்தது. அதே சமயத்தில் மடத்து மதியின ரிலைமையும் ஆதீனப் புலவர் களின் ஏளன நிலையும் தெளிவாகத் தெரிந்தது. (2) அடிகள் அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற பெயரில் தமிழகமெங்கும் பக்தர்களைக் கூட்டினார். எப்பக்கம் நோக்கினும் விழாக்கள், வழிபாடுகள் நடை பெற்றன. எந்த நல்ல அமைப்பிலும் சில தீயவர்களும் இடம் பெற்று விடுவர் என்பது உலகியல். மெய்ப்பொருள்