பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - நினைவுக் குமிழிகள்-3 இதில் உண்மையும் இருக்கலாம் என்று என் மனம் எண்ணியது. அடிகளார்பால் உண்மையான அன்பும் அளவற்ற மதிப்பும் கொண்டிருந்த என் உள்ளத்தில் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்கலாமோ? (3) துரைக்கண்ணு முதலியார் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றத் தொடங்கிய முதலாண்டில் (1954- 1955) கல்லூரித் தமிழ் மன்றத்தின் அந்த ஆண்டு. நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்க அடிகளாரை அழைத் திருந்தோம். அடிகளார் வருகை புரிவதற்குச் சற்று முன்னதாகவே நானும் முதலியாரும் சொற்பொழிவு மண்டபத்திற்குப் போய் இருக்கை வசதிகள் முதலிய வற்றைக் கவனித்துக் கொண்டிருந்தோம். மாணவர்கள் வெளியில் கூட்டம் கூட்டமாக இருந்தவர்கள் ஒவ்வொருவ ராக மண்டபத்தில் துழைந்து கொண்டிருந்தனர். அப்போது எஸ். திருவேங்கடாச்சாரி, கே. நாராயண அய்யங்கார், எஸ்.கிருஷ்ண அய்யங்கார் (மூவரும் கல்லூரிப் பேராசிரியர்கள்) சேர்ந்தாற்போல் மண்டபத்தில் நுழைந் தனர்.அப்போது நான் முதலாழ்வார்கள் மூவரும் வந்து விட்டனர்; கூட்டத்திற்கு ஒரு களையும் தட்டும்' என்றேன். முதலியார் உடனே (சற்றுக் கிண்டல் தொனியுடன்?) இவர்களுள் பொய்கை யார்? பூதம் யார்? பேய் யார்?' என்று கேட்டார். இவர்களுள் திருவேங்கடாச்சாரியைத் தவிர, ஏனைய இருவரும் சரியாக வைணவம் தெரியாத வர்கள்; இவர்கள் ஏதாவது தவறாகக் கருதிவிடுவார்களோ என்ற ஐயமும் அச்சமும் என்னிடம் எழுந்தன. ஒரு வகை யாகச் சமாளித்துக் கொண்டேன். பொய்கையார் காஞ்சியில் திருவெஃகாவின் வடபுறத் திலுள்ள பொற்றாமரைப் .ெ பா ய் ைகயி ல் பூத்த நற்றாமரைப் பூவிலே பிறந்தவர்; பரபக்திக்கு இருப்பிட மாணவர். பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லையில் ஆரம்) குருக்கத்திழ்,பூந்த்ரிலுள்ள குருக்கத்தி மலரில் பிற்ந்தவர்; "பரஞான்த்திற்கு எல்ல்ை"நிலமாகத்