பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குடி அடிகள்ார் - - 1 ፰3 ) திகழ்பவர். வடமொழியில் (பூ-ஸத்தாயாம்') என்கின்ற வேர்ச் சொல்லடியாகப் பிறந்தது பூதம் என்னும் சொல் சத்தைப் பெற்றது என்பது பொருள். பேயாழ்வார் மயிலாப்பூரில் ஒரு கிணற்றிலுண்டான செவ்வல்லிப் பூவில் பிறந்தவர். இவர் பரமபக்திக்கு எல்லை நிலமாகத் திகழ்பவர். பேய் பிடித்தவர் என்று சொல்லும்படி நெஞ்சழிந்து கண் சுழன்று அழுதும் சிரித்தும் தொழுதும் எழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அழுதுமே பொழுது போக்கிக் கொண்டிருந்தமையால் இவர் பேயாழ்வார் என்ற திருநாமம் பெற்றார். - பரபக்தி என்பது எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்னும் ஆவல்; அவனை நேரில் காணல் பரஞானம்; பின்பு மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல் பரம்பக்தி". இவ்வாறு முதல்வர் வினாவிற்கு நேராக விடை தராமல் திசை திருப்பி இந்த மூவரின் பக்தி நிலையை அடியேனால் அறுதியிட்டு உரைக்க முடியாததால் இவர்களுள் யார் பொய்கை, யார் பூதம், யார் பேய்? என்பதை என்னால் இனம் பிரித்துக் காட்ட இயலவில்லையே' என்று ஒருவாறு சமாளித்துக் கொண்டேன். மூவரும்ே இவ் வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தனர். - குறிப்பிட்ட நேரத்தில் அடிகளார் வருகை புரிந்தார். மாணவர் ஒருவர் இறைவணக்கம் பாட, முதல்வர் வரவேற்புரை நல்க விழா தொடங்கியது. அடிகளார் பேச்சு தொடங்கிப் பாதி முடிந்தது. இந்நிலையில் கோட்டையூர் அழகப்பர் மகளிர்க் கல்லூரி முதல்வர் சரோஜினி அம்மையார் 70 மாணவிகளுடனும் மூன்று ஆசிரியைகளுடனும் ஒரு பேருந்தில் வந்து சேர்ந்தார். இப்போது மண்டபம் நிறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 200 பேர். கூட்டத்தைக் கண்டதும் அடிகளாருக்குத் தனி உற்சாகம்; முதலிலிருந்தே பேசத் தொடங்கிவிட்டார். அன்று முதல்வரும் அதிக உற்சாகத்துடன் இருந்தமையால்