பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நினைவுக்குமிழிகள்-3 கத்திற்கு வயது ஏழு : இராமகிருட்டிணனுக்கு வயது மூன்று. இந்தச் சமயத்தில் நான் நோயால் சிறிது தாக்குண் டேன். பெரகம்பி செல்லும்பொழுதெல்லாம் உண்ணும் உணவு அளவில் குறைந்து விட்டது. இரண்டு நாள் நான் பிறந்து ஏழு வயது வரை வளர்ந்த ஊரிலுள்ள பல உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்ந்தேன். குறிப்பிட்ட நாளில் நானும் மனைவியுடனும் குழந்தை களுடனும் மாட்டு வண்டியில் தோப்பை அடைந்தேன். என்னுடன் என் அம்மான், சிற்றப்பா முறையிலுள்ள நெருங்கின உறவினர் (என் தாயாரைப் பெற்ற பாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர்) வந்தார்கள். இராமலிங்கத் திற்குக் கிராப்புத் தலை. இராமகிருஷ்ணனுக்குத் தலைவாரி இரண்டு சடைகள் போட்டு ஆரஞ்சு வண்ண நாடாக்கள் சூட்டியிருந்தோம். இருவருக்கும் தோப்பில் முடி இறக்கப் பெற்றது. இராமகிருஷ்ணன் முடி துறந்த இளவரசன் போல் திகழ்ந்தான். வெந்நீரால் இருவரையும் குளிப் பாட்டினோம். என் மனைவி, குழந்தைகள், என் தாய் மாமன், சிற்றப்பா, தியாகராஜ ரெட்டியார் அவர் தந்தையார், என் தாயார் இவர்களுடன் மலைக்குப் புறப் பட்டேன். கோட்டாத்துாரிலிருந்து குதிரை வண்டியில் வந்திருந்த நல்லப்பரெட்டியாலும் மலைக்கு வந்தார். என் தம்பி துணைவியுடன் வந்திருந்தான். இருவரும் மலைக்கு வந்தனர். சின்ன மலை தான். குழந்தைகளால் ஏற முடிய வில்லை. துக்கிக்கொண்டோம். முருகனை அருச்சனை செய்து வழிபட்டோம். வெள்ளிக்காவடியை முருகன் திருவடியில் வைத்து வணங்கினான் இராமலிங்கம். சுமார் முற்பகல் 11-30 க்குக் கீழே இறங்கிவிட்டோம். இறங்கும் போது நான் இராமகிருஷ்ணனைத் துரக்கிக்கொண்டேன். தியாகராசரெட்டியார் இராமலிங்கத்தைத் தூக்கிக் கொண்டார். . . . . குமரன் வழிபாட்டுடன் eflf) ஆராதனை தொடங்கியது. ஏழைகள் உட்பட சுமார் 75 பேர்.