உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டிக்குளத் திருத்தலப் பயணம் 盈37 உண்டனர். உண்டபிறகு மேலும் வந்த ஏழைகட்குச் சாம்பார் சாதம் உருண்டை உருண்டையாக வழங்கப் பெற்றது. மாலை நான்கு மணிக்குக் கோட்டாத்துார் திரும்பினோம். நான் சிறுவர்களுடன் குதிரை வண்டியில் புறப்பட்டதால் மாலை ஆறு மணிக்கே கோட்டாத்துார் வந்தடைந்தேன். மீதி சோற்றுடன் மற்றவர்கள் வந்த வண்டி மாலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தது. மீதி சோறு பண்ணையாட்களுக்கு வினியோகிக்கப் பெற்றது. நாங்களும் உண்டோம். மறுநாள் காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு என் மனைவி, தாயார், குழந்தைகள் இவர் களுடன் பேருந்தில் நேராகத் திருச்சி வந்தோம்; திருச்சிக்குத் துறையூரிலிருந்து கோட்டாத்துார் வழியாகச் சில பேருந்துகள் ஒடிக்கொண்டிருந்தன. அக்காலத்திலேயே. இருப்பூர்தி சந்திப்பில் உள்ள உணவு விடுதியில் உணவு உண்டோம். பகல் 1-30க்கு காரைக்குடிக்கு இருப்பூர்தி இருந்தது. அதில் ஏறி மாலை 4-30 மணிக்கு காரைக்குடி வந்து சேர்த்தோம். இந்தப் பயணத்தில் மிகச்சிரமப்பட்டுப் போனேன். சம ஆர்ாதனை ஏற்பாடுதான் மிகச் சிரமத்தைத் தந்து விட்டது; பலருக்கும் தொல்லை விளை வித்தேன். செட்டிகுள வேலனின் அருளால் எல்லாம் மன நிறைவுடன் நிறைவு பெற்றன. بر துய்யதோர் மறைக ளாலும் துதித்திடற் கரிய செவ்வேள் செய்யபே ரடிகள் வாழ்க; சேவலும் மயிலும் வாழ்க: வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க; அன்னான் பொய்யில்சீர் அடியார் வாழ்க; வாழ்கஇப் புவன மெல்லாம்