பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலபல பள்ளிகள் 143 பிள்ளைகளின் கல்வித் தேவையை அறிந்து முன்னேற். பாட்டுப்பள்ளி ஒன்று தொடங்கப் பெற்றது; இதற்கு முதன் முதலாக செல்வி நீலா என்ற இளங்கலைப் பட்டம் பெற்ற பெண்ணைத் தலைமையாசிரியையாக நியமனம் செய்தது நிர்வாகம். இவர் உளவியல் பேராசிரியர் V. N. சுப்பிரமணியத்தின் மைத்துணி (மனைவியின் தங்கை). இவர் அடுத்த ஆண்டு பயிற்சிக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து பயிற்சிபெற்ற பின் ஒரு சில ஆண்டுகள் மாதிரிப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி யாற்றிய பின் கும்பகோணத்திலுள்ள ஓர் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாகப் பல ஆண்டு பணியாற்றி ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் பணியிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டு சென்னை கஸ்தூர்பா நகரில் தம் மைத்துனர் வீட்டில் தன் தமக்கைக்குத் துணையாக வாழ்ந்து வருகின்றார். காரைக் குடியில் ஒய்வு பெற்ற பிறகு பேராசிரியர் சுப்பிரமணியம் கஸ்தூர்பா நகரிலுள்ள தன் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். (தன் மகன் பொறியியல் வல்லுநர்; ஒரு கம்பெனி யில் பணியாற்றுபவர்; சிரீதர் என்ற பெயருடையவர்) நீலா திருமணமாகாதவர் -நான்கு ஆண்டுகட்கு முன்னர் (1985) பேராசிரியர் சுப்பிரமணியம் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார். 1985-மார்ச்சு மாதம் அப்பக்கமாகப் போக நேர்ந்த போது சுப்பிரமணியத்தைப் பார்த்து வரலாம் என்று அவர் இல்லம் அடைந்த போது இந்த இறப்புச் செய்தியை அறிந்து துயருற்றேன். பத்தாண்டுகள் நெருங்கிப் பழகினோம் அல்லவா? 4. மாண்டிசாரிப் பள்ளி : இந்த அம்மையார் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் (கி.பி. 1870-1952). இந்த அம்மையார் ஃபிராபெல் என்ற அறிஞரைப் போலவே, குழந்தைகளை வளரும் செடிகளாகவே கருதினார். குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைக் கூர்த்தமதியினராக்கலாம் என்று