பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தொடர்பு 145 கல்லூரி வளாகம். இங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் குழந்தைகட்கு இங்குக் கல்வி பெறும் வாய்ப்பு கிட்டும். §.jo) நிறுவனங்களில் ஒன்றாகிய மாண்டிசாரிப் பள்ளியைத் திறக்கும் பொறுப்பை வள்ளல் அவர்கள் எனக்கு அளித்தது வியப்பைத் தந்தது. ஏன் என்பதை யோசித்துப் பார்த்தேன். உண்மை விளங்கியது. நான் தற்சமயம் எந்தப் பதவியிலும் இல்லை; ஒய்வு பெற்றுப் பேரன் பேத்திமார்களிடையே மகிழ்ச்சியாகப் பொழுது போக்கி வருகின்றேன். பெரியவர்களும் சிறியவர் களுமாக அறுபது பேர்களிடையே அளவளாவுகின்றேன். இப்படிச் சொந்தப் பிள்ளைகளிடையே பொழுது போக்கும் கிழவன்தான் குழந்தைப் பள்ளியைத் திறப்பதற்குச் சரியான ஆசாமி என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறி அனைவரையும் மகிழ்வித்தார். தொடக்க ஆண்டுகளில் இப்பள்ளி நன்கு செயற்பட்டு வந்தது. வரவர தரத்தில் குறைந்து விட்டதோ என்ற ஐயம் என்பால் உண்டு. பெரும்பாலும் மாண்டிசாரி அம்மையாரின் கல்விபற்றிய தத்துவங்களை மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் அடிக்கடி என்பால் எழுகின்றது. என்ற போதிலும் கல்லூரி வளாகத்தை நினைக்கும் போதெல்லாம், வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததோர் ஊரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்? 2. பா.க;தோ.பா. வெள்ளைத் தாமரை-6. நி-10