பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தொடர்பு 夏4岁 பேராசிரியர் எஸ். சீநிவாச அய்யர் இப்பதவியை விரும்பவில்லை. காரனம், எப்போதோ எல். டி. படித்தது. இனி, கல்வி பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்; அவற்றில் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், இஃதெல்லாம் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதற்கு என்று நினைத்தார் போலும். எனினும் வள்ளல் விருப்பத்தை எப்படி மறுப்பது? ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. நல்லவர்; வ ல் ல வ ரு ங் கூ ட , இரண்டாண்டு காலம் தள்ளினார். இந்தப் பதவிக்குப் பேராசிரியர் எஸ். திருவேங்கடாச்சாரி மிகவும் பொருத்து மானவராக இருந்தார். பதவியை அவாவியும் நின்றார். ஆனால் அப்பொழுது வள்ளல் மனத்தில் இவர் இடம் பெறவில்லை. ஒய்வுபெற்றவர்கள் தாம்-அல்லது ஐம்பது வயதைத் தாண்டினவர்கள்தாம்- முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்ற எண்ணம் இடம் பெற்று விட்டால், இவருக்கு எப்படி அப்பதவி கிடைக்கும்? இவர் தான் நாற்பது வயது கூட தாண்டவில்லையே. ஆனால் பேராசிரியர் சாரி பல பொறுப்புகளை மேற்கொண்டி குந்ததால் பேராசிரியர் சீநிவாச அய்யருக்கு தம் பொறுப்பு எளிதாக அமைந்து விட்டது. (அய்யர் என்று தன்னை அழைப்பதை இவர் விரும்பவில்லை. சீநிவாசன் என்று தான் இவர் அழைக்கப் பெற்றார். எப்படியோ இரண் டாண்டுகள் காலம் தள்ளி விட்டார். 1953-54, 1954-55 ஆண்டுகள் இப்பதவியிலிருந்தார்; அதன் பிறகு கலைக் கல்லூரிக்கே தாம் இருந்த இடத்திற்கே போய் விட்டார். கல்லூரியின் தொடக்கக் காலத்தில் கல்லூரியின் சார்பாக பேராசிரியர் எஸ். திருவேங்கடாச்சாரி, பேராசிரியர் வி. என். சுப்பிரமணியம் ஆகிய இருவருமே 1950-51, 1951-52, 1952-53 ஆகிய மூன்றாண்டுகள் சென்னைப் பல்கலைக்கழக கல்வி ஆலோசனைக் குழுவில் {Academic Council) உறுப்பினர்களாக இருந்து வந்தனர். தொடக்க காலத்தில் இவர்கள் இருவரும் ஆசிரியர்களால்