பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - நினைவுக் குமிழிகள்-3 ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1953-54 முதல் மூன்றாண்டுகள் இருவர் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். நான் துறையூரில் தலைமையாசிரியராக இருந்த காலத்திலேயே தலைமையாசிரியர் தொகுதி யிலிருந்து பேரவை உறுப்பினராக வருவதற்குத் தேர்தல் மூலம் முயன்றேன்; முடியவில்லை. இளமை காரணமாக வாக்குகள் அதிகம் கிடைக்காமையால் தோற்றேன். அடுத்து பதிவு பெற்ற பட்டதாரிகள் (Registered Graduates Constituency) @5sré55u?á g)(5(p65) so offsårgy தோற்றேன். இளமைதான் காரணம்; இந்நிலையில் நான் வாக்காளர்கள் மனத்தில் இடம் பெறவில்லை. கல்வி ஆலோசனைக் குழுவிலோ, பேரவையிலோ உறுப்பினராக இருந்து நான் சாதி க்கப் போவது ஒன்று மில்லை. யாரும் சாதிக்க முடியாது. யாரோ ஓரிருவர் தீர்மானம் கொண்டு வருதல், தீர்மானங்களை ஆதரித்தோ ம று த் தோ பேசுதல் போன்ற இரைச்சல்” போடலாம். காரியம் ஒன்றும் சாதிக்க முடியாது, விரல் விட்டு எண்ணக்கூடிய யாரோ ஐவர் அல்லது அறுவர் கருத்துப்படிதான் காரியங்கள் நடைபெறும் இவர்களும் துணைவேந்தர் கருத்துக்குத் தாளம் போடுவர்; அல்லது ஒத்து ஊதுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற (மருத்துவத்தில்) டாக்டர் ஏ. எல். முதலியார் துணை வேந்தராக இருக்கும் போது எவருடைய குரலும் எடுபடாது; பேச்சு வெறும் இரைச்சலாகத்தான் முடியும். ஒரு விதத்தில் இது நல்லதாகவே இருந்தது. உயர்தரக் கல்வியில் மிகவும் அக்கறை கொண்டு சனநாயக முறையில் அவை உறுப்பினர்களைத் தம் பக்கம் அனைத்துக் கொண்டு உயர்ந்த முறையில் துணைவேந்தர் செயற்படும் போது வீண் இரைச்சல் எதற்கு? என்றுதான் என்னால் நினைக்க முடிந்தது. - நான் இந்த அவைகளில் உறுப்பினராக முயன்றது. உயர் மட்டக் கல்வி முறை எப்ப்டிச் செயற்படுகின்றது.