பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தொடர்பு Í 4 $ என்பதைக் காண்பதற்காகவே அன்றி ஒன்றையும் சாதிக்க முடியும் என்பதற்காக அன்று. இளமை முதலே இத் துடிப்பு என்னிடம் இயல்பாகவே இருந்து வருகின்றது. இரண்டு மூன்று முறை உயர்நிலைப்பள்ளியில் இருந்த போது தேர்தலில் தோற்ற அநுபவம் இப்போது கிளர்ந் தெழுந்தது. ஒரு ஏழெட்டு பேர்களுக்குள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்க முடியாது போயினும் தேர்தலில் நின்றாவது பார்க்கலாம் என்ற ஆசை எழுவது இயல்புதானே. கல்வி ஆலோசனைக் குழுவில் இடம் பெற மூவர் ஆசைப் பட்டோம். இவர்களுள் நான் ஒருவன்: திரு எஸ். .கிருஷ்ணய்யங்கார் (கணிதம்), திரு கே. நாராயண அய்யங்கார் (ஆங்கிலம்) ஆகிய இருவர் மற்றவர்கள். ஒரு குட்டித் தேர்தல் நடை பெற்றது; நானும் திரு. கிருஷ்ணய் யங்காரும் தேர்ந்தெடுக்கப் பெற்றோம். இந்தச் சிறு விஷயத்தில் கூட இறைவனது சங்கல்பம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது என் நம்பிக்கை. தொடக்கக் காலத்தில் மூன்று முறை தோற்ற என்னை இப்போது இறைவன் சங்கல்பம் இருந்தமையால் வெற்றி பெற முடிந்தது என்று நம்புகின்றேன். கல்வி ஆலோசனைக் குழுவில் தேர்ந்தெடுக்கப் பெற்ற தொடக்க காலத்திலேயே இன்னொரு தேர்தல் வந்தது. கல்வி ஆலோசனைக் குழுவிலிருந்து நால்வர் பேரவைக்கு (Senate) வரலாம் தேர்தல் மூலம். கல்லூரிக்கு மூவர் வீதம் கல்வி ஆலோசனைக் குழுவில் கிட்டத்தட்ட இருநூறு பேர் இருந்தனர். இவர்களுள் கல்லூரி முதல்வர்கள் பதவித் துறை சார்பாக (Ex-officer) உறுப்பினர்கள். கல்லூரிக்கு இருவர் வீதம் ஆசிரியர்கள், உறுப்பினர்கள். முதலில் பேரவைக்கு இரு உறுப்பினர் களின் இடங்கள் காவி என அறிவிக்கப் பெற்றன. நான் இதற்குப் போட்டியிட்டேன். அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன். ஒவ்வொருவர் இரண்டு வாக்குகள் அளிக்க லாம். சிலர் இரண்டு வாக்குகளையும் பயன்படுத்துவர்;