பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தொடர்பு 15r போக்கிலிருந்து இந்தத் தீர்மானத்திற்கு வளைந்து கொடுத்தார். பலர் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினர். பாட நூல்கள் தமிழில் இல்லை; கலைச் சொற்கள் இன்னும் உறுதி செய்யப் பெறவில்லை. இந்நிலையில் இத்திட்டம் வெற்றியுடன் செயற்படாது; செயற்படவும் முடியாது என்று காரணங்கள் கூறி எதிர்த் தனர். இறுதியாகத் துணைவேந்தரின் வளைந்து கொடுக்கும் தன்மையை அறிந்து வேண்டா வெறுப்பாகத் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றனர்; தீர்மானமும் நிறைவேறியது. இத்தீர்மானம் நிறைவேறியது 1956 பிப்பிரவரி, மார்ச்சுக் கூட்டங்களில் என்பதாக நினைவு. நாட்டு நடப்பையும் தாய்மொழி மூலம் கற்பிப்பதன் மெத்தனப் போக்கையும் நான் நன்கு அறிந்து கொள்ள இக்கூட்டங்கள் எனக்கு ஒரு வாய்ப்பளித்தன. காரைக்குடி திரும்பியதும் 'அறிவியல் பயிற்றும் முறை ஒராண்டிற்குள் எழுதி வெளியிட வேண்டும் என்று உறுதி கொண்டு செயற் பட்டேன். நான் ஓர் அறிவியல் பட்டதாரி (வேதியியல், இயற்பியல், கணிதம்-பாடங்களைப் பட்டப் படிப்பில் படித்து முதல் வகுப்பில் பல்கலைக் கழகத்தில் மூன்றாவது நிலை பெற்றவன்). தவிர, ஒன்பதாண்டுகள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஆறு படிவம் வரை (8 முதல் 11 வகுப்பு வரை) ப்ொது அறிவியல் கற்பித்தல் அநுபவமும் எனக்கு இருந்தது. பயிற்சிக் கல்லூரியிலும் அறிவியல் கற்பிக்கும் முறைகளை நேரில் கண்டு கொண்டிருக்கும் வாய்ப்பும் இருந்தது. இந்நிலையில் மீனை நீரில் விட்டது போன்ற அநுபவமும் தோன்றியது. மிக உற்சாகமாகப் பணியில் இறங்கினேன். அறிவியல் கற்பிக்கும் முறைகள் பற்றிய ஆங்கில நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்றேன். சில உளவியல் நூல்களையும் பயின்று. கொண்டிருந்தேன்.