பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - - '. நினைவுக் குமிழிகள்-3 நூல் அமைய வேண்டிய முறையைத் தற்காலிகமாக வகுத்துக் கொண்டு திட்டம் இட்டேன். பதினைந்து இயல்களில் நூலை அமைத்தேன். பழநியப்ப சகோதரர் களை நெருங்கி நூலின் அவசியத்தையும் அது வெளிவர வேண்டிய அவசரத்தையும் எடுத்துக் கூறி வெளியிடுமாறு வேண்டினேன். அவர்களும் மனமுவந்து ஒப்புக் கொண்டு நூலை இரண்டே மாதத்தில் வெளியிட்டனர். நூல் 1957 ஏப்ரல் முதல் நாள் முதல் தமிழகத்தில் உலா வரச் செய்தனர். இஃது என்னுடைய மூன்றாவது வெளியீடு. இந்த நூலை எழுதி வருங்கால் வள்ளல் அழகப்பர் நோய் வாய்ப்பட்டிருந்தார். சென்னையில் தனியார் மருத்துவ மனையொன்றில் சேர்க்கப் பெற்றுச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். நான் அவரைச் சென்று பார்த்து வந்ததாக நினைவு. அழகப்பா அறக்கட்டளையின் துணை மேலாளராக இருந்த திரு. பத்மநாபன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய இந் ரால்களிலிருந்து தேந்ர்தெடுத்த பாடல்களை இசையுடன் பாடித் தெய்வ விருந்து அளித்துக் கொண்டிருந்தார். வள்ளலும் தமிழில் மிக்க ஆர்வமுடையவர். அவருக்கும் பல தெய்வப் பாடல்கள் மனப்பாடம். திரு. பத்மநாபனும் தமிழ்ப்பற்றுடையவர். ராய. சொ.விடம் நெருங்கிய தொடர்புடையவர். இதனால் தெய்வப் பாடல்களை அதிகம் படிப்பவர். - நூல் வெளிவருவதற்கு முன் வள்ளல் இருப்பாரா என்ற ஐயம் எனக்கு இருந்து வந்தது; நிலைமை மிக மோசமாக இருந்தது. இந்த நூலை வள்ளல் அழகப்பருக்கு அன்புப் படையலாக்க திட்டமிட்டிருந்தேன். நூல் அச்சாகும்போதே என்னுடைய நூல் முகமும் தயாரா யிற்று; இரண்டு திங்கட்கு முன்னர் அன்புப் படையலுக்கு உரிய பாடலும் தயாராகிவிட்டது. ராய.சொ.விடமும் சா. கணேசனிடமும் பாடலைக் காட்டினேன். அவர்கள்