பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தொடர்பு 53 நன்றாக இருப்பதாக அறிவித்தனர். இரண்டு திங்களுக்கு முன்னரே பாடலைப் திரு. பத்மநாபனுக்கு அனுப்பி * அறிவியல் பயிற்று முறை சென்னைப் பல்கலைக்கழக பேரவைத் (Senate) தீர்மானத்தின்படி எழுதப் பெற்ற முதல் நூல் என்றும், நான் பயிற்சிக் கல்லூரியில் பணி யேற்ற பிறகு அந்த அநுபவத்தின் அடிப்படையில் எழுதப் பெற்ற முதல் நூல் என்றும், அதனை வள்ளலுக்கு அன்புப் படையலாக்கப் பெறுகின்றது என்றும் தெரிவிக்குமாறும் அன்புப் படையல் பாடலை அனுப்பி அவருக்குப் பாடிக் காட்டுமாறும் கேட்டிருந்தேன். பாடல் இது: நலங்கிளர் ஊக்கம் எனும்புனல் பேய்து நாள்தொறும் அன்புற வளர்த்த பொலங்கிளர் முயற்சிக் கொடியினில் பூத்த பொருளெனும் நறுமலர் கொய்து புலங்கிளர் தெய்வக் கலைமகள் அடிக்கே பொற்புற அணிந்துளம் களிக்கும் வலம்கிளர் டாக்டர் அழகப்ப வள்ளல் மலரடிக் குரியதிந் நூலே. என்பது. இந்தப் பாடலை திரு. பத்மநாபன் படித்துஇல்லை, பாடி - வள்ளலை மகிழ்வித்தார். அடிக்கடிப் பல நாட்கள் இதைப் பாடும்படிக் கேட்டு மகிழ்ந்திருந்தார் என்று திரு. பத்மநாபனும் எனக்கு எழுதியிருந்தார். இந்த நூல் கட்டமைக்கப் பெற்று அவர் கைக்குக் கிட்டும் முன்னர் அவர் முத்தராகி மீளா உலகம் சென்று அடைந்தார். கல்லூரிகள் நிறுவின வளாகத்திலேயேவேறு கலப்பின்றி சந்தனக் கட்டைகளையே அடுக்கி அவற்றின் மீது அவர் தெய்வத் திருமேனியைப் படுக்க வைத்து சந்தனக் கட்டை களாலேயே மூடி எரியூட்டினர். ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் உறவினர்களும் காரைக்குடி,கோட்டையூர், கண்டனுார்-புதுவயல், கானாடுகாத்தான் முதலிய பல ஊர்ப் பெருமக்களும் குளமான கண்களுடன் இக்