பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 డడ్లీ - நினைவுக் குமிழிகள்-3 காட்சியைக் கண்டனர். இன்னும் ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால் அவர் காலத்திலேயே ஒரு பல்கலைக் கழகம் கண்ட பெருமையுடன் இவ்வுலகை நீத்திருப்பார். ஆயினும் என்? இறைவன் திருவுள்ளக் குறிப்பின்படி. 28 ஆண்டுகள் கழித்து அழகப்பா பல்கலைக்கழகம் தோன்றியது; வள்ளவின் கனவும் நனவாகியது. முத்தி உலகினின்றும் வள்ளல் இதைக் கண்டுகளித்துக் கொண் டிருக்க வேண்டும். வள்ளல் மறைந்த ஒரு திங்களுக்குப் பிறகு கண்டனுார். சென்று அவர் அருமைத் திருமகளார் உமையாள் ஆச்சிஅவரது கணவர் இராமநாதன் இருவரிடமும் நூலின் ஒரு படியைத் தந்து மகிழ்ந்தேன் அவர்களும் நான் வள்ளல் பால் கொண்டிருந்த உள்ளன்பைப் பாராட்டி மகிழ்ந்தனர். குமிழி - 125 19. என் கல்விப் பணி நீரின் பணியேற்ற முதலாண்டு எம்.ஏ. தேர்வுக்கு. மும்முரமாகப் படித்து வந்ததால், முதலாண்டு வகுப்பு நடத்துவதற்குத் தேவையான அளவு பாடங்களைத் தயாரித்துக் கொண்டு காலத்தைக் கழித்தேன்.இரண்டாம் ஆண்டிலிருந்து மும்முரமாகப் பணியில் இறங்கினேன். "தமிழ் பயிற்றல் பற்றி ஒரு பெரிய நூல் எழுதவேண்டும். என்ற எண்ணம் பணியை ஒப்புக்கொண்ட அன்றே. முகிழ்த்தது. ஒரு பெரிய நூல் எழுதுவதென்பது எளிய செயலன்று. அதுவும் தாய்மொழிப் பயிற்றல் பற்றியும், கல்வி உளவியல் பற்றியுமான எண்ணற்ற நூல்களில் பல வற்றைப் படித்தல் வேண்டும். கருத்துக்களை பல இயல்: