பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. I 5き。 நினைவுக் குமிழிகள்-3 பட்டப் படிப்புடன் தமிழாசிரியர்கள் தோன்றினார்கள். ஆதலால் மொழி பயிற்றும் ஆசிரியர்கள், குழந்தைப்பள்ளி முதல் கல்லூரிவரை பணியாற்றுவோர் அறியவேண்டிய செய்திகள் யாவை என்பது பற்றிய எண்ணம் மனத்தில் நெருடிக் கொண்டிருந்தன. ஆகவே இவற்றை மனத்தில் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.பயிற்றும் முறைகள் பற்றி எத்தனையோ ஆங்கில நூல்கள் தோன்றி யுள்ளன. இவையும் நூலில் சுருக்கமாகவாவது இடம் பெறத் திட்டம் இட்டேன். இந்த நூலில் பத்து முறை களைச் சுருக்கமாக இரண்டு இயல்களில் விளக்கியுள்ளேன். இம் மாதிரியான நூல்களை எழுதும்போது, இயல் இயலாக எழுத முடியாது. மேனாட்டு நூல்களைப் பயிலும் போது பல கருத்துகள் மனத்தில் எழுந்து கொண்டே இருக்கும். பல உளவியல் கொள்கைகள் தோன்றிய வண்ணம் இருக்கும். மாணாக்கர்கள் வகுப்பு நடத்தும் போதும் அநுபவம் மிக்க ஆசிரியர்கள் பல நிலைகளில் வகுப்புகளை நடத்தும் போதும் பல அநுபவ உண்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.இவை யாவும் நூலில் இடம் பெற வகை செய்தல் வேண்டும். இக்காரணத்தால் எல்லா இயல்களும் வளர்ந்த வண்ணம் இருக்கும். அந்தந்த இயல் களில் பொருத்தமானவற்றைப் பொருத்தமான இடத்தில் சேர்த்து நூலை வளப்படுத்தல் வேண்டும். அநுபவத்தை யொட்டி நூல் அமைந்தால்தான் பயிற்சி பெறும் மாணவஆசிரியர்கட்கும், -ஏன்? அநுபவம் மிக்க ஆசிரியர்கட்கும் கூடத்தான்-கல்வித் துறையில் ஆர்வம் மிக்க பொது மக்களுக்கும் இது நடை முறையில் பயன்படுவதாக அமையும். - - - சிறந்த ஆசிரியர்களாகிய அரிஸ்டாட்டில் பெஸ்ட லாஸ்ஸி, ரூஸோ, ஹெர்பார்ட், ஃபிராபெல், மாண்டிசாரி, ஜான்ட்யூயி, கீல்பாட்ரிக் போன்றவர்களின் கருத்துகள் யாவும் அநுபவக் களஞ்சியங்கள். கற்பிக்கும் துறையில்