பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப் பணி 『夏59 செலுத்தும் மீகாமனைப் போல, துறையறிந்து பாடத்தை நல்ல முறையில் கொண்டு செலுத்த முடியும். பாட வளர்ச்சியில் விடுக்கப்பெறும் வினாக்கள் மாணாக்கர் களைப் படிப்படியாகப் புதிய பொருள்களை அறியத் துணை செய்பவை. பாடத்தின் ஒவ்வொரு படியின் இறுதி யிலும் பாட முடிவிலும் விடுக்கப்பெறும் வினாக்கள் கற்பித்த பாடத்தை மாணாக்கர்கள் எந்த அளவில் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும் எவற்றில் ஐயப்பாடுகள் உள்ளன? எவற்றைத் திரிபாக உணர்ந்தனர்? எவற்றைத் தவறாக உணர்ந்தனர்? என்பவற்றை அறியவும் எப்பகுதி களை இன்னும் நன்கு விளக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளப் பயன்படுபவை. வினாக்களை அமைப் பதில் சிறந்த திறன் வேண்டும். சிந்தனையும் வேண்டும். அவற்றை விடுப்பதிலும் திறமும் சிந்தனையும் வேண்டும். வீட்டு-வேலையின் இன்றியமையாமையை எல்லோரும் அறிவர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் சிந்தனை வின்றியே ஒவ்வொரு பாடத்தின் ஈற்றில் காணப்பெறும் பயிற்சிகள் எல்லாவற்றையும் செய்து வரும்படி ஏவு கின்றனர். தம் பாடமே முக்கியம் என்று சில ஆசிரியர்கள் அளவுக்கு மீறிய வீட்டு-வேலையை மாணாக்கர்மீது சுமத்தி விடுகின்றனர். இவற்றைச் செய்வதற்கு எவ்வளவு காலம் வேண்டும் என்பதை எவருமே எண்ணிப் பார்ப்பது இல்லை. ஒருவித நோக்கமுமின்றி வீட்டு-வேலையைத் தருவதால் நற்பயன் ஒன்றும் விளையாது; அதற்கு மாறாகத் தீமைதான் விளையும். படிப்பிலும் வெறுப்புத் தட்டும்; இத்தகைய கருத்துகள் நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன. அறிவு வளர்ச்சி பெறுவது மூன்று விதமாக நடைபெறு கின்றது. பழைய பொருள்களுடன் புதிய போருள் சேர்வ தாலும், இவ்வாறு பெறும் பொருள்கள்-செய்திகள்அநுபவமாக மாறுவதாலும், புதிய செய்திகளை மேலும் மேலும் கண்டறிவதாலும் அறிவு வளர்ச்சியடைகின்றது