பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 நினைவுக் குமிழிகள்-3 என்பது கல்வி இயலார் கண்ட உண்மை. அறிவு ஒரு மரம் வளர்வதைப் போல் வளர்கின்றதேயன்றி ஒரு கற்குவியல் போல் வளர்வதில்லை . எனவே, புதிதாகக் கற்பிக்கும் பொருள்கள் முன்னறிவுடன் நன்றாகப் பிணைக்கப் பெற்றுப் பட்டறிவாக மாற வேண்டும். இச்செயலில் ஆசிரியர் ஒரு தோட்டக்காரன் நிலையைத்தான் மேற் கொள்ள வேண்டும். செடிகள் வளர்வதற்குத் தோட்டக் காரன் எவ்வெச் செயல்களை மேற்கொள்கின்றானோ, அதைப் போலவே ஆசிரியரும் மாணாக்கர்களின் அறிவு வளர்ச்சி பெறுவதற்குச் சாதகமாக இருக்கும் செயல்களை மேற்கொள்ளல் வேண்டும். மாணாக்கர்களின் அக்கறையை எழுப்புதல், கற்பனவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தப் பள்ளி வாழ்க்கையில் வாய்ப்புகளைத் தருதல், சிந்தனைக்கு வாய்ப்புகளை நல்குதல், பல துணைக் கருவிகளால் புதிய பொருள்கட்கு விளக்கத்தருதல், கருத். தேற்றம் (Suggestion) தருதல் முதலியவை ஆசிரியர் செய்ய வேண்டியவையாகும். மாமல்லபுரம், சித்தன்ன வாசல், மதுரை, திருச்சி மலைக்கோட்டை முதலிய இடங் கட்குச் சுற்றுலா செல்லலை மேற்கொள்ளுதல், மிருகக் காட்சிச்சாலை, அரும்பொருள் காட்சியகம், பெரிய நூலகங்கள் இவற்றிற்கு மாணாக்கர்களை இட்டுச் செல்லுதல் ஆகியவற்றால் மாணாக்கர்களின் மனம் விரிவடைந்து மேலும் கற்பதற்கு ஆர்வம் கிளர்ந்தெழும். கல்வியியல் பற்றிய நூல்களில் சில வழிகாட்டும் உண்மைகள் உள்ளன. அவற்றை முறைவல்லார் சிறுசிறு சொற்றொடர்களாகக் கூறிச் சென்றுள்ளனர். அவை தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்குப் போதல், முழுதிலிருந்து பகுதிக்குப் போதல், காட்சி நிலையிலிருந்து கருத்து நிலைக்குச் செல்லல், சிறப்பிலிருந்து பொது விற்குப் போதல், எளிமையிலிருந்து அருமைக்குப் போதல், தெளிவிலிருந்து சிக்கலுக்குப் போதல், தெளிவற்ற நிலை யிலிருந்து தெளிவான நிலைக்குப்போதல் என்பவை.