பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப்பணி j 63 கற்பிக்க வேண்டும் என்பது இந்தத் தொடர்களின் பொருளாகும். . இந்த நூலில் படிப்பு (Reading) என்பது பற்றி விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. கல்வி கற்றவில் இஃது எல்லா நிலையிலும் இன்றியமையாத படியாதலால் இதுபற்றி மேனாட்டில் ஏராளமான நூல்கள் வெளி வந்துள்ளன. இவற்றையெல்லாம் கற்று இவற்றின் கருத்துகள் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. படிப்பின் வகைகள், படிப்பு தொடங்க வேண்டிய நிலை, படிப்பில் ஊக்குவித்தல், படிப்பு பயிற்றும் முறைகள், படிப்பில் பயிற்சி தரவல்ல துணைக்கருவிகள், வாய்விட்டுப் படித்தல் (Cral Reading), assrúšć5-ulo. 335i (Silent reading). #53 துணரும் ஆற்றல், படிப்பில் வேகம், சொற்களஞ்சியப் பெருக்கம் என்ற தலைப்புகளில் இந்த விளக்கம் இடம் பெறுகின்றது. - இன்னும் மொழிப் பயிற்சிகள், கட்டுரைப் பயிற்சி, இலக்கியம் கற்பித்தல், இலக்கணம் கற்பித்தல், ஆசிரியரின் வேலைத் திட்டங்கள், மாதிரிப் பாடங்கள், பள்ளிக்குரிய நூல்கள், கல்வித்துறைச் சோதனைகள்- இவை இந்நூலில் விரிவான விளக்கம் பெறுகின்றன. தாய்மொழி ஆசிரியர் கள்பற்றி ஓர் இயல் மூன்றாம் பதிப்பில் சேர்க்கப் பெற்றுள்ளது. இந்தப் பெருநூல் எழுதி முடித்து அச்சு வடிவம் பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் ஆயின. பயிற்றிக் கொண்டே நூல் எழுதப்பெற்றமையால் நூல் அதுபவ நூலாக அமைந்துள்ளது. பலர் விரும்பிக் படிக்கின்றார் கள்; பாராட்டுகின்றனர். மூன்றாம் பதிப்பு பெரியார் எழுத்தில் வெளி வந்தது; அதுவும் இப்போது கிடைக்காது. நூல் முடிந்து 1957 பிப்பிரவரி வாக்கில் சா. கணேச னிடம் காட்டி இதை வெளியிடுவதற்கு நல்ல கம்பெனி ஒன்றிற்குப் பரிந்துரைக்குமாறு வேண்டினேன். அவர்