பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப்பணி - ... I 65 'ரெட்டியார் நாள் . பிற்பகல் வகுப்பு நடைபெறுவதை நிறுத்தி விட்டு உங்கள் பள்ளியில் முக்கால் மணிநேரக் கூட்டம் அமைத்து இவரைப் பேசச் செய்து மாலை 6 மணிக்கு வரும் இருப்பூர்தியில் ஏற்றிவிடுங்கள்’’ என்று பணித்தார். மூன்று நிறுவனங்களிலும் அரைமணி நேரம் வீதம் பேசினேன்; மாலை ஆறு மணிக்குக் கோவை செல்லும் இருப்பூர்தியில் ஏறிக் கோவை வந்து, மதுரை செல்லும் இருப்பூர்தியில் ஏறி திண்டுக்கல்லில் இறங்கிப் பேருந்து மூலம் காரைக்குடிக்குத் திரும்பினேன் அணிந் துரையுடன். அன்றே தகல் எடுத்து சென்னைக்கு அனுப்பி னேன். நூல் அக்டோபர் 1-ம் தேதி (1957) வெளி வந்தது. * - மூன்றாண்டுப் பருவத்திலேயே தந்தையை இழந்தவன், "தந்தையொடு கல்விபோம்" என்று பெரியோர் கூறுவர். என்றாலும், பல இன்னல்கட்கிடையே சிறிதும் தளராது 'அம்மையாக இருந்து அறுசுவை உண்டி ஊட்டி என்னை வளர்த்தும், அப்பனாக இருந்து கல்வி பயிற்றுவித்தும்" 'அம்மையும் அப்பனுமாக இருந்து எனக்கு எல்லாவித நலன்களையும் அருளி என்னை ஆளாக்கின என் அருமை அன்னையின் பொன்னார் திருவடிகட்கு இந்நூலை, நற்றவத் தாயே! வாழி!பல் லாண்டு நலனுறப் பெற்றெனை வளர்த்துக் கற்றவ னாக்கிப் பேணினை உலகிற் காணுறு பொருளெலாம் கொணர்ந்துன் சிற்றடிப் புறத்தில் வைப்பினும் அவை நின் சீரருட் கொப்பென லாமோ? மற்றிதை உணர்வேன்! எனினுமிந் நூல்நின் மலர் பதத் துரிமை செய்தனெனே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். தாய்மொழியைச் சிறார்களிடம் வளமாக வளர்க்கும் வழியைக் கூறும் தமிழ் பயிற்றும் முறை யாம் இந்நூலைத்