பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xv அதிவீரராமபாண்டியனின் திருவாக்குப்படி அந்தக் கேண்மை அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்த து அந்தக் கற்பக விநாயகக் கடவுளின் கருணையே என்று இப்போது நினைந்து பார்க்கின்றேன். இந்தக் கருணையின் விளை வு தான் புதிதாகத் தொடங்கப்பெற்ற வள்ளல் அழகப்பரின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணி ஏற்கவும் காரைக்குடி வாழ்வு அமையவும் சா.கணேசன் அவர்கள் கருவியாக அமைந்தார்கள் . பத்தாண்டுகள் தொடர்ச்சியாகவும் ஆறாண்டுகள் விட்டுவிட்டும் அமைந்த காரைக்குடி வாழ்வு தான் நினைவுக் குமிழிகள்-3 என்று இலக்கிய வடிவம் பெறுகின்றது. காரைக்குடி வாழ்வில்தான் துறையூர் வாழ்வில் அங்குரித்த இலக்கிய வாழ்வு -அகவளர்ச்சி-பேராசிரியர் க. அன்பழகன் கூறியது போல் இமயம்போல் வளர்வதற் கேற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையை எண்ணும் போது, - தடித்தஓர் மகனைத் தந்தையிண் டடித்தால் தாயுடன் அணைப்பள்; தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் ஈங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதரீ ஆதலால் என்னை அடித்தது போதும் அனைத் திடல் வேண்டும் அம்மை அப் பாஇனி ஆற்றேன்" என்ற வடலூர் வள்ளலாரின் திருவாக்கும் நினைவுக் குமிழியாகின்றது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட இக்கட்டு களைத் தகர்க்கும் பாங்கில் ஏற்பட்ட கல்லூ ரிப் பணி அமைந்தமைக்கு வான்வழியாக இலங்கைக்குத் தாவிச் சென்ற அதுமனுக்கு மகேந்திர மலை அமைந்ததுபோல் 5. திருவருட்பா-ஆறாம் திருமுறை-பிள்ளைச் சிறு விண்ணப்பம்-1