பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 66 நினைவுக் குமிழிகள்-3' தாய்க்குப் படைப்பது மிகவும் பொருத்தம் தானே. இஃது. என்னுடைய நான்காவது வெளியீடு (அக்டோபர்-1957) இதனைத் தொடர்ந்து இதுகாறும் எழுதி வைத் திருந்த கட்டுரைகள் காலமும் கவிஞர்களும், கவிதையும் கற்பனையும், இயற்கைக் கூத்து, பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு, திராவிட நூலின் வரலாறு, வளரும் பயிர் (ஆறு கட்டுரைகள்), வானொலிப் பேச்சுகளாக அமைந்த திருவள்ளுவர் கண்ட நாடு, தமிழொடு ஆங்கில உறவு, சோழர் கால வாணிகம், புத்தர் காட்டிய நெறி' (நான்கு கட்டுரைகள்), பாரதியின் பாஞ்சாலி சபதம்’ (குமரி மலரில் வெளி வந்தது), பாவை நோன்பு (கலை மகளில் வெளி வந்தது) ஆகிய 12 கட்டுரைகளைத் தொகுத்துக் காலமும் கவிஞர்களும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன் (சனவரி-1958), இஃது என் ஐந்தாவது வெளியீடு. இதற்கு ப. துரைக்கண்ணு முதலியார் (முதல்வர்) முன்னுரை வழங்கியுள்ளார்; நூல் தாளாளர் C. W. CT. W. வேங்கடாசலம் செட்டியார். அவர்கட்கு அன்புப் படையலாக்கப் பட்டது. குமிழி-126 20. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் ཕཡ། འདྲཉྩ༠༨ கிசிரைக்குடியில் மிக வு ம் பிரபலமானவர் சா. கணேசன். காந்திவழி நிற்பவர்; நாட்டுப்பற்று. மிக்கவர். பலமுறை சிறைக்குச் சென்றவர். 1942-இல் தலைமறைவாக இருந்து நாடு விடுதலை பெறும் பொருட்டுச் செயற்கருஞ் செயல்களைச் செய்தவர்.