பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்அடிப் பொடி . 167 சட்டை போடாதவர்; கதரைத் தவிர, வேறு ஆடைகளை அணியாதவர். சுமார் நாற்பது ஆண்டுகட்குமேல் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்பவர். காரைக்குடிக் கம்பன் திருநாள் இவர்தம் திருத்தொண்டு. கம்பனுக்கு ஒரு மணி மண்டமும் தமிழன்னைக்கு ஒரு திருக்கோயிலும் கட்டி முடித்த திருத்தொண்டர். கம்பன்மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டு கம்பன் அடிப் பொடி ஆனவர். பல்லாண்டுகளாகக் கம்பன்அடிப் பொடி என்ற பெயரா லேயே வழங்கப்படுபவர். அடியேன் வாழ்வில் திசை திருப்பியவர். என்னுடைய உயர் நிலைப்பள்ளி வாழ்வி விருந்து கல்லூரி வாழ்வுக்கு இழுத்துக் கொண்டவர். காரைக்குடியில் வாழ்ந்த பத்தாண்டுக் காலத்தில் இவர் இல்லத்திற்குப் பின்புறமுள்ள தெருவில் வாழ்ந்த வனாதலால் அடிக்கடிக் கலந்து பழகும் வாய்ப்பு எளிதில் பெற முடிந்தது. என் எழுத்துப் பழக்கத்தில் உற்சாகம் ஊட்டி அது வளர்வதற்குக் காரணமாக இருந்தவர். காரைக்குடியிலிருந்தபோது, பெரிய ஏழு நூல்களை எழுதினேன். எல்லாவற்றின் கைப்படிகளிலும் இவர்தம் கை வண்ணத்தின் பங்கு உண்டு. பெரும் பகுதிகளைப் படித்துத் திருத்தங்களைக் கூறிச் செம்மைப் படுத்தியவர். தமிழோடு பலதுறை ஆர்வலர். இலக்கியம், கலை, கல்வெட்டு, நாட்டு மருத்துவம், அரசியல், இசை, நாடகம் போன்ற அனைத்திலும் ஆர்வம் காட்டுபவர். கல்லூரிக் கல்வியை எட்டிப் பிடிக்காதவர் கல்லூரிப் பேராசிரியர் களின் அறிவுக்குமேல் பெற்றுத் திகழ்ந்தவர். எல்லாத் துறை ஆசிரியர்களிடமும் துறையறிவு பெற்றவர்போல் உரையாடி அவர்களை வியப்பில் ஆழ்த்துபவர். டாக்டர் ஜான்சனின் சங்கம் பிரபலமானது என்பதை ஆங்கில இலக்கிய ஆர்வலர்கள் நன்கு அறிவர். பல்வேறு துறை அறிஞர்கள் இவர் சங்கத்திற்கு வந்து உரையாடி மகிழ்வர் என்பதைப் படித்ததுண்டு. அங்ங்னமே இவர் இல்லம் - "கற்பக கிலையம் - பலதுறை அறிஞர்கள் வந்து கூடி