பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - - நினைவுக்குமிழிகள்-3 மகிழ்ந்து உரையாடிச் செல்லும் இடமாகத் திகழும். இவர்தம் உதவியால்-எல்லா நிலைகளிலும் உள்ளவர் கள்-மேல் நிலைக்கு வந்தவர்கள் எண்ணற்றவர்கள். வாழ்வு பெற்றவர்கள் பலர். சுருங்கக் கூறினால் மனத் தாலும், சொல்லாலும், எழுத்தாலும் பிறருக்குத் தொண்டு புரிவதில் இவருக்கு நிகர் இவரே. மறந்தும் பிறன் கேடு சூழாத மாபெரும் தெய்வம். ஆறு, ஏழு ஆண்டுகள் சிந்தித்து எழுதிய இரண்டு பெரிய நூல்கள் தமிழ் பயிற்றும் முறை, இல்லற நெறி என்பனவாகும். முன்னதன் கைப்படியை முற்றிலும் நோக்கியவர்; பின்னதன் கைப்படியை மேலோட்டமாகப் பார்த்தவர். இது வேலனுக்கு வேங்கடத்தான் கடிதங்கள்' என்று கடித உத்தியைக் கையாண்டு எழுதப் , பெற்ற நூல். ஒரு பெண் வயதுக்கு வந்து, திருமணம் ஆகி, பிள்ளை பெறும் வரையிலும் நேரிடக் கூடிய விவரங் களையும் எதிர்பாராது நேரிடும் சிக்கல்களையும் தெளிவாக உணர்த்தும் முறையில் ஒட்டமான தீந்தமிழில் எழுதப் பெற்றது. இதற்கு மன மக்களுக்கு என்று முதலில் பெயர் சூட்டியிருந்தேன். அது எனக்கு மன நிறைவு தரவில்லை. காம நூல் என்று பெயர் பெற்று விடுமோ என்ற அச்சம் உள்ளுற இருந்து வந்தது. சா. கணேசன் இதன் கைப்படியை முற்றும் நோக்கா விடினும் அங்குமிங்குமாகவும், இதிலுள்ள ஐம்பதிற்கு மேற்பட்ட வரை படங்களை முற்றிலும் நோக்கி நூலின் போக்கையும் நோக்கையும் அறிந்து கொண்டவர். இதற்குச் சூட்ட வேண்டிய பல்வேறு பெயர்களைச் சிந்தித்தோம்: ஆராய்ந்தோம். இறுதியாக இல்லற நெறி என்ற பெயரைச் சூட்டினோம். புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெரியவர்கள் தூக்கி ஆசி கூறுவதைப் போல், என் நூலின் கைப்படிகளைத் தொட்டு, படித்து, செப்பஞ் செய்யும் குறிப்புகளைத் தந்து வாழ்த்தியமை யால் அவை இன்றும் புழக்கத்தில் இருந்து பெரும்