பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவுக் குமிழிகள்-3 குடைவரைக் கோயில்களையும் தீட்டிய சித்திரங்களையும் காண ஒரு பயணத்தைத் தொடங்கினான். இவன் மருதங்குடி வந்தபோது அங்குள்ள குன்றில் ஒரு கணபதியைத் தம் சிற்பிகளைக் கொண்டு செதுக்கி வைத்தான். இப்படி உருவானதுதான் பிள்ளையார்ப் பட்டிப் பிள்ளையார். தமிழ்நாட்டில் குடைவரைக் கோயிலில் பிள்ளையார் திருஉருவம் அசைக்க முடியாத திரு உருவமாக அமைகின்ற வாய்ப்பு கிடைத்தது. ’’ இந்தப் பிள்ளையாரின் திருமேனி மற்றத் தமிழ் நாட்டுப் பிள்ளையார் திருமேனியினின்றும் வேறுபட்டிருப் பதைக் கண்டேன். பிள்ளையாரின் துதிக்கை வலஞ் சுழிந்து, வலம்புரி விநாயகராகக் காணப்படுகின்றார். இந்தப் பிள்ளையார் இரண்டே கைகளால் மண்ணை யும் விண்ணையும் ஆள்கின்றார். அங்குசமும் பாசமும் இன்றியே அடியவரை ஆட்கொள்ளும் ஆற்றல் உடையவ ராகத் திகழ்கின்றார்.வயிற்றை ஆசனத்தில் பதிய விடாமல் அர்த்தபத்ம ஆசனத்தில் கால்களை மடித்த நிலையில் காணப்படுகின்றார். வலக்கரத்தில் மோதகத்தைத் தாங்கியும் இடக்கரத்தை இடையில் பொருத்திய நிலை யிலும் காட்சி தருகின்றார். இந்த நிலையை சா. க. எனக்குச் சொல்லாமலேயே நானே அவருக்குச் சுட்டிக் காட்டினேன். அவரும் என் உற்று நோக்கல் திறனைக் கண்டு மகிழ்த்தார். இந்நிலையில் இத்திருக்கோயிலில் இருக்கும் சந்திரசேகரர் அவரது துணைவி இவர்களின் திருமேனிகள் செப்புச்சிலைகளாக இருப்பதைக் காட்டி இவை சோழர் காலத்துச் சிலைகள் என்பதை விளக் கினார் சா. க. இக்கலைச் சிற்பியின் வேலைப்பாடுகளைத் தூண்களில், விதானங்களில் இருப்பதையும் காட்டி விளக்கினார். இந்தத் திருக்கோயிலில் மார்கழித் திருவாதிரைத் திருநாளும், பத்து நாள் நடைபெறும் விநாயகச் சதுர்த்தி விழாவும் மிகக் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள பிள்ளையாரின் பேரருளைக்