பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நினைவுக் குமிழிகள்-3 திகழ்ந்தார். இவர் நாகர் கோயிலைச் சேர்ந்தவர். இடை நிலைக்கல்வி (intermediate) கல்வி பெற்று மேற்படிப்பு தொடராமல் கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பர்மா நல்ல நிலையிலிருந்தபொழுது பெரும்பான்மையான தன வணிகப் பெருமக்கள் செல்வச்செழிப்புடன் திகழ்ந் தனர். இப்பகுதியில் பணப் புழக்கம் அதிகம் இருந்தது. பல பகுதிகளிலிருந்து தொடக்க நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இங்கு வந்து பணியாற்றினர். செட்டி நாட்டுப்பகுதிகளில் தொடக்க நிலைப்பள்ளிகளே உயர்நிலைப் பள்ளிகள்போல் சீருடனும் சிறப்புடனும் இயங்கி வந்தன. கண்டனுரர் உயர் நிலைப்பள்ளி கல்லூரிபோல் இயங்கி வந்தது. பள்ளிக் கட்டடமே கல்லூரிக் கட்டடத்தை விட மிகச் சிறப்பாகத் திகழ்ந்தது. நான் காரைக்குடி சென்றபோது இப்பள்ளியில் எஸ். இராகவாச்சாரி என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்ததாகவும் அவர் பின்னர் கீழச்சீவல்பட்டி உயர்நிலைப் பள்ளிக்குப் போய் விட்டதாகவும் அறிந்தேன். பள்ளிக்கட்டடத்தின் மாடியின் முகப்பில் பெரிய எழுத்தில் * தமிழ் வெல்க!' என்று பொறிக்கப் பெற்றிருந்ததைக் கண்டேன். இதற்கும் இராகவாச்சாரி வெளியேறியதற்கும் தொடர்பு காட்டி விளக்கினர் சில ஆசிரியர்கள். தமிழுணர்ச்சி அப்பகுதியில் தலை தூக்கி நின்ற காலம். இதற்கு விரோதமாகச் செயல்பட்டவர்கள் நெருப்புடன் விளையாடுபவர்களானார்கள். தமிழுணர்ச்சி எழுச்சியாக எழுவதற்குக் காரணமாக இருந்தவர் ஒரு தமிழாசிரியர்; தன வைசிய இளைஞர். நான் காரைக்குடி சென்றபோது அவர் மலேயாவுக்குப் போய் விட்டதாகச் சொன்னார்கள். இப்பள்ளியில்தான் திரு ஆ. முத்துசிவம் பணியாற்றிப் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து தமிழ் பி. ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்று சா. கணேசன் ஆசியால் கல்லூரியில் பேராசிரியர் பதவியைப் பெற்றார். அக்காலத்தில் பி.ஏ.யில் சிறப்புத் தமிழ் இல்லாத காலம். அப்படி இருக்கும் கல்லூரியில்