பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துகிவம் I 75 தான் தமிழாசிரியர்கட்கு-துறைத் தலைவராக இருப்பவர் கட்கு-பேராசிரியருக்குரிய சம்பளம் அனுமதிக்கப் பெற்றி ருந்தது. அழகப்பா கல்லூரியில் பி.ஏ. சிறப்புத்தமிழ் இல்லாமலேயே திரு ஆ. முத்துசிவம் பேராசிரியர் (Professor) நிலையில் இருந்தார்; அப்பதவிக்குரிய சம்பளமும் பெற்றுக் கொண்டிருந்தார். இது சா. கணேசனின் உதவியால் தான் நடைபெற்றது. பேராசிரியர் ஆ. முத்துசிவம் மேடைப் பேச்சாளர். நன்கு பாடுவார். ரசிகமணி டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஜஸ்டிஸ் எஸ். மகராசன் போன்றவர்களின் தொடர்பும் நட்பும் இவருக்கிருந்தன. ஜஸ்டிஸ் எஸ். மகராசன் இவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் திட்டம் போட்டிருந் தார். இறையருள் கூட்டி வைக்கவில்லை. அக்காலத்தில், இவருடைய கவிதை", அசோகவனம்’ (கட்டுரைகள்), கலிங்கத்துப்பரணி விளக்கம் மிக்க செல்வாக்குடன் புழக்கத்திலிருந்தன. அவை இப்போது அச்சிலேயே இல்லை. ஸ்டார் பிரசுரம் (71, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005) இவற்றை வெளி யிட்டிருந்தது. பொது மக்களிடம் திறனாய்வு பற்றிய கருத்துக்களை முதன் முதலாகப் பேசி வந்தவர். இவரைப் போலவே தமிழ் எம். ஏ. வகுப்பிற்குக் கற்பிக்கும் வாய்ப்பு கள் பெற்றிருந்த பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தமும், டாக்டர் மு. வ. வும், பேராசிரியர் பரமசிவானந்தமும் இக்கருத்துகளை சொற்பொழிவுகளாகவும் நூல்களை வெளியிட்டும் பரப்பி வந்தனர். இவர்கட்குப் பிறகு கவிதை யநுபவம் என்னும் என் திறனாய்வு நூல் கழிக வெளியீடாக வெளி வந்தது. தமிழ் எம்.ஏ. மாணாக்கர்களிடையே மிக்க செல்வாக்குடன் புழக்கத்தில் இருந்தது. கோவையிலிருந்த பிரபல வழக்கறிஞர் பாலகிருஷ்ண நாயுடு அவர்கள் இந்த நூலில் மிகவும் ஈடுபட்டுப் படித்துச் சுவைத்தார் என்று அவர் சம்பத்தி என்அரிய நண்பர் டாக்டர் ஜி.டி. கோபால