பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意孪 என் துறையூர் வாழ்வும் கடுமையான உழைப்பும் அமைந்தன என்று நீள நினைந்து பார்க்க முடிகின்றது. என் வாழ்க்கை வரலாற்றின் இந்தப் பகுதி (மூன்றாம் பகுதி) வெளிவருவதற்கும் எம்பெருமானின் கருணை யினால் கருணாநிதியின் தமிழக அரசு சிறிது நிதிஉதவியது. 'தினைத் துணை நன்றி'யாக இருக்கும் இந்த உதவியினைப் 'பயன் கருதிப் பன்னத் துணையாகக் கொள்கின்றேன். அரசின் சால்பு எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதா யிற்று இந்த உதவியும் - செயப்பட்டார் சால் பின் வரைத்து’. இங்ங்ணம் உதவிய தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சிஇயக்ககத்தின் மூலம் என் உளங்கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்த நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டு உதவிய பூரீ கோமதி அச்சக உரிமையாளர் திரு. சி. சரவணகுமார் அவர்கட்கும்; எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக் கட்டை தயாரித்து மூன்று வண்ணத்தில் அச்சிட்டு உதவிய கலைமன்னர் திரு. P. N. ஆனந்தனுக்கும்; நூலைக் கவின் பெறக் கட்டமைத்துத் தந்த அருமைத்தம்பி V.திருநாவுக்கரசுக்கும் என் உளங்கலந்த நன்றி என்றும் உரியது. இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய டாக்டர் ச. மெய்யப்பன் என் நெடுநாளைய நண்பர். சுமார் முப்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகியுள்ளோம். அண்மை யில் டாக்டர் பட்டம் பெற்றவர், பல்லாண்டுகட்கு முன்னமே பெற்றிருக்க வேண்டிய பட்டம் தாமதமாகப் வந்து சேர்ந்தது. எதையும் ஆழ்ந்து கற்பவர். உரைக்கப் படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து, கொள்வோன் கொள் வகை அறிந்து, அவன் உளங்கொளக்கோட்டமில் மனத் தில் கொடுக்கும் பண்பை இவருடைய மாணாக்கர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற ஆன்றோர் மொழியை மனத்தில் இருத்தி ஈத்துவக்கும் இன்பம் கண்டவர். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பல அறக்கட்டளைகளை